Breaking News : தெ.ஆ தொடருக்கான ஒருநாள் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமனம் – பி.சி.சி.ஐ அதிரடி

Rohith
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடர் தற்போது இந்தியாவில் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் அடுத்ததாக தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியானது அந்நாட்டிற்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோத உள்ளது. இந்த தொடருக்கான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட அணியின் கேப்டனாக விராட் கோலி செயல்படுகிறார்.

மேலும் விராட் கோலி தலைமையின் கீழ் 18 பேர் கொண்ட டெஸ்ட் அணியானது இன்று அதிகாரப்பூர்வமாக பிசிசிஐ மூலம் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது இந்திய அணியில் முக்கிய மாற்றமாக ஒருநாள் கிரிக்கெட்க்கும் ரோகித் சர்மா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இது குறித்த அறிவிப்பையும் பிசிசிஐ தங்களது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

- Advertisement -

அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடருடன் டி20 வடிவ கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகி இருந்தார். அதனை தொடர்ந்து தற்போது ஒருநாள் தொடருக்கான அணியிலும் கேப்டன் மாற்றம் இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் பிசிசிஐ இன்று இந்த அதிரடியான முடிவை எடுத்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் எதிர்வரும் தென் ஆப்ரிக்க தொடரில் இருந்து ஒருநாள் அணியை ரோகித் சர்மா வழி நடத்துவார் என்றும் இனி வரும் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவும், டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக விராத் கோலியும் அணியை வழிநடத்துவார் என்று இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : 3 போட்டிகள் கொண்ட தென்னாபிரிக்க தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு – பி.சி.சி.ஐ வெளியீடு

இந்த அறிவிப்பினால் தற்போது விராட் கோலி அதிருப்தி அடைந்திருந்தாலும், ரோகித் சர்மாவின் ரசிகர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த உங்களது கருத்து என்ன ?

Advertisement