3 போட்டிகள் கொண்ட தென்னாபிரிக்க தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு – பி.சி.சி.ஐ வெளியீடு

IND
- Advertisement -

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரையும், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. அதனைத் தொடர்ந்து அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாட அந்நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த தென்ஆப்பிரிக்க தொடருக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அட்டவணையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி டிசம்பர் 26ஆம் தேதி துவங்க உள்ள இந்த தொடருக்கான இந்திய அணி தேர்வில் ஏகப்பட்ட மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் எதிர்பார்த்தபடியே சில முக்கிய மாற்றங்களை பிசிசிஐ செய்துள்ளது.

- Advertisement -

அதன்படி புஜாரா மற்றும் ரஹானே ஆகியோருக்கு இடம் அளிக்கப்பட்டிருந்தாலும் ரஹானேவின் துணை கேப்டன் பதவியை பறித்து ரோஹித் சர்மாவிடம் வழங்கியுள்ளனர். மேலும் மிடில் ஆர்டரில் சேர்க்கப்படாமல் இருந்த விஹாரியை அணியில் இணைத்துள்ளார்கள். அதேபோன்று ஓய்வில் இருந்த ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாக்கூர் ஆகியோர் அணிக்கு திரும்பி உள்ளனர்.

அதன்படி விராட் கோலி தலைமையிலான 18 பேர் கொண்ட டெஸ்ட் அணியை பிசிசிஐ அதிகாரபூர்வமாக தற்போது வெளியிட்டுள்ளது. முழு லிஸ்ட் இதோ :

- Advertisement -

இதையும் படிங்க : சேன்ஸ் வேணுமா ? அப்போ பர்ஸ்ட் இதை பண்ணுங்க. நான் ரவி சாஸ்திரி கிடையாது – டிராவிட் தடாலடி

1) விராட் கோலி (கேப்டன்), 2) ரோஹித் சர்மா (து.கேப்டன்), 3) கே.எல் ராகுல், 4) மாயங்க் அகர்வால், 5) புஜாரா, 6) ரஹானே, 7) ஷ்ரேயாஸ் ஐயர், 8) ஹனுமா விஹாரி, 9) ரிஷப் பண்ட், 10) சாஹா, 11) அஷ்வின், 12) ஜெயந்த் யாதவ், 13) இஷாந்த் சர்மா, 14) மொஹம்மது ஷமி, 15) உமேஷ் யாதவ், 16) பும்ரா, 17)ஷர்துல் தாகூர், 18) முகமது சிராஜ்

Advertisement