ஐபிஎல் 2022 : இந்தாண்டு ஐ.பி.எல் தொடரில் பி.சி.சி.ஐ செய்துள்ள அதிரடி மாற்றம் – 4 புதிய ரூல்ஸ் இதோ

IPL-1
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் வரும் மார்ச் 26ஆம் தேதி முதல் கோலாகலமாக துவங்கி மே 29-ஆம் தேதி வரை 2 மாதங்கள் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகி வருகிறது. இந்த வருடம் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இம்முறை இந்தியாவிலேயே நடைபெறும் இந்தத் தொடரில் முதலாவதாக நடைபெறும் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்று மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் மட்டும் நடைபெறுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

Ganguly-ipl
IPL MI

குறிப்பாக வரும் மார்ச் 26 – மே 22 வரை நடைபெறும் லீக் சுற்று போட்டிகளுக்கான அட்டவணை மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. அதன் பின் நடைபெறும் வெற்றியாளரை தீர்மானிக்கும் இறுதி போட்டி உள்ளிட்ட பிளே ஆஃப் சுற்றுக்கான அட்டவணை மற்றும் இதர விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

- Advertisement -

10 அணிகள் – புதிய பார்மட்:
அதேபோல் இந்த வருடம் லக்னோ மற்றும் குஜராத் ஆகிய புதிய 2 அணிகள் தோற்றுவிக்கப்பட்டதை அடுத்து வழக்கமாக நடைபெறும் 60 போட்டிகளுக்கு பதிலாக 74 போட்டிகள் கொண்ட பிரமாண்ட ஐபிஎல் தொடர் இந்த வருடம் நடைபெற உள்ளது. இம்முறை புதிதாக 2 அணிகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளதால் லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும் என்ற வழக்கமான பார்மட்க்கு பதில் புதிய பார்மட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

IPL

அதன்படி அனைத்து 10 அணிகளும் தலா 5 அணிகள் கொண்ட குரூப் ஏ மற்றும் பி ஆகிய 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதவுள்ளன. இந்தப் பிரிவுகள் என்பது இதற்கு முன் ஒரு அணி எத்தனை கோப்பைகளை வென்றுள்ளது மற்றும் எத்தனை பைனல்களில் விளையாடியுள்ளது என்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைப்படி குரூப் ஏ பிரிவில் இருக்கும் ஒரு அணி அதே பிரிவில் இருக்கும் எஞ்சியுள்ள 4 அணிகளுடன் தலா 2 போட்டிகளில் மோத வேண்டும். அதன்பின் குரூப் பி பிரிவில் தமக்கு நேர் எதிராக உள்ள அணியுடன் 2 போட்டிகளில் மோத வேண்டும். அதேசமயம் குரூப் பி பிரிவில் எஞ்சியிருக்கும் 4 அணிகளுடன் தலா 1 போட்டியில் மோத வேண்டும். இந்த வகையில் ஒரு அணி 14 லீக் போட்டிகளில் விளையாட உள்ளது.

- Advertisement -

புதிய விதிமுறைகள்:
இந்த புதிய பார்மட் அடிப்படையில் ஐபிஎல் தொடர் விரைவில் துவங்க உள்ள நிலையில் 2022 சீசனுக்காக மேலும் ஒரு சில புதிய விதிமுறைகளை பிசிசிஐ அறிவித்துள்ளது. குறிப்பாக டிஆர்எஸ், சூப்பர் ஓவர் உள்ளிட்ட அம்சங்களில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக பிரபல க்ரிக்பஸ் இணையதளத்தில் செய்தி வெளியாகி உள்ளது. அதைப் பற்றி பார்ப்போம்.

dhoni

1. அதில் முதலாவதாக அம்பயர் தீர்ப்பை எதிர்த்து மறுபரிசீலனை செய்யும் டிஆர்எஸ் எண்ணிக்கையை ஒரு இன்னிங்ஸ்க்கு இரண்டாக ஐபிஎல் நிர்வாகம் உயர்த்தியுள்ளது. இதுநாள் வரை ஒரு இன்னிங்ஸ்க்கு 1 டிஆர்எஸ் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கூடுதலாக 1 வழங்கப்பட்டுள்ளது.

- Advertisement -

2. அதேபோல் கரோனா காரணமாக ஏதேனும் ஒரு சில அணிகள் பாதிக்கப்பட்டு அந்த குறிப்பிட்ட அணியின் போட்டி நடைபெறாமல் போகும் பட்சத்தில் அந்தப் போட்டியை லீக் சுற்றின் முடிவில் நடத்த பிசிசிஐ முயற்சிக்கும். ஒருவேளை அது நடைபெறாமல் போனால் அதைப்பற்றி ஐபிஎல் டெக்னிகள் கமிட்டியிடம் விவாதிக்கப்படும். இந்த விஷயத்தில் ஐபிஎல் டெக்னிக்கல் கமிட்டி எடுக்கும் முடிவே இறுதியாக பின்பற்றப்படும். இதற்கு முன்பு வரை இது போன்ற சூழ்நிலைகளில் ஒரு போட்டி ரத்து செய்யப்படும் பட்சத்தில் அந்த போட்டிக்கான 2 வெற்றி புள்ளிகள் எதிரணிக்கு கொடுக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

3. அதேபோல் ஒரு கேட்ச் பிடிப்பதற்கு முன்பாக அந்த பந்தை எதிர்கொண்ட பேட்ஸ்மேனுக்கு எதிர்ப்புறம் இருக்கும் பேட்ஸ்மேன் பிட்ச்சை க்ராஸ் செய்து பந்தை எதிர் கொள்ளும் இடத்திற்கு சென்றுவிட்டால் அடுத்த பந்தை புதிதாக எதிர்கொள்ளும் பேட்ஸ்மேனுக்கு பதிலாக எதிர்ப்புறம் இருந்த க்ராஸ் செய்த பேட்ஸ்மேன் எதிர்கொள்ளலாம் என்ற நிலைமை இருந்து வந்தது.

- Advertisement -

அதை சமீபத்தில் மாற்றி அமைத்த எம்சிசி ஒரு கேட்ச் பிடிக்கும் போது எதிர்ப்புறம் இருக்கும் பேட்ஸ்மேன் மாறினாலும் மாறா விட்டாலும் அடுத்த பந்து அந்த ஓவரின் கடைசி பந்தாக இல்லாமல் இருக்கும் பட்சத்தில் அதை அடுத்ததாக களமிறங்கும் புதிய பேட்ஸ்மென் தான் எதிர்கொள்ள வேண்டும் என அறிவித்தது.இந்த அறிவிப்பு வரும் அக்டோபர் 1, 2022 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதை முன்கூட்டியே ஏற்றுக்கொண்டுள்ள ஐபிஎல் நிர்வாகம் வரும் மார்ச் 26-ஆம் தேதி முதல் துவங்கும் ஐபிஎல் தொடரில் நடைமுறைக்கு வருவதாக அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : ரஹானே, புஜாரா ஆகியோரது இடத்தை நிரப்ப இவர்தான் தகுதியானவர் – கேப்டன் ரோஹித் சர்மா வெளிப்படை

4. ஐபிஎல் பிளே ஆஃப் மற்றும் பைனல் போட்டிகளில் ஒரு போட்டி டை ஆகும் பட்சத்தில் வெற்றியாளரை தீர்மானிக்கும் சூப்பர் ஓவர் கொண்டு வரப்படும். ஒருவேளை மழை உள்ளிட்ட ஏதேனும் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த சூப்பர் ஓவரின் வாயிலாக போட்டியின் முடிவு கிடைக்காமல் போனால் அந்த 2 அணிகளில் எந்த அணி லீக் சுற்றில் மிகச் செயல்பட்டு புள்ளிப் பட்டியலில் டாப் இடத்தை பிடித்ததோ அந்த அணி வெற்றியாளராக அறிவிக்கப்படும்.

Advertisement