ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக லக்ஷ்மணனை நியமிக்க இதுவே காரணம் – ஜெய் ஷா பேட்டி

Jay-Shah-and-Laxman
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான முதன்மை இந்திய அணியானது ஆகஸ்ட் 27-ஆம் தேதி துவங்கவுள்ள ஆசிய கோப்பை தொடருக்காக தயாராகி வரும் வேளையில் அதற்கு இடையே இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற இருக்கிறது. வரும் ஆகஸ்ட் 18-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியானது கே.எல் ராகுல் தலைமையில் ஜிம்பாப்வே சென்றுள்ளது.

INDvsZIM

- Advertisement -

இளம் வீரர்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ள இந்த இந்திய அணியே இந்த ஜிம்பாப்வே தொடரில் பங்கேற்கும் என ஏற்கனவே பிசிசிஐ அறிக்கையை வெளியிட்டதோடு, 16 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலையும் வெளியிட்டிருந்தது. இந்நிலையில் இந்த ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக VVS லக்ஷ்மணன் செயல்படுவார் என்று அதிகாரவபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்திய அணியின் முன்னாள் வீரரும், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவருமான VVS லட்சுமணன் பயிற்சியாளராக நியமிக்கப்பட என்ன காரணம் என்பது குறித்து தற்போது பிசிசிஐயின் முக்கிய நிர்வாகி ஜெய்ஷா தெளிவான விளக்கத்தை கொடுத்துள்ளார். அந்த வகையில் ஜெய் ஷா கூறியதாவது : இந்த ஜிம்பாப்வே தொடருக்கான பயிற்சியாளராக லட்சுமணன் இந்திய அணியுடன் செல்கிறார். ஏனெனில் தற்போது ராகுல் டிராவிட்டுக்கு சிறிய ஓய்வு தேவைப்படுகிறது.

Laxman

அதுமட்டுமின்றி ஜிம்பாப்வே தொடரானது ஆகஸ்ட் 18-ஆம் தேதி துவங்கி 22-ஆம் தேதி முடிவடைகிறது. ஆனால் முதன்மை வீரர்களை கொண்ட இந்திய அணியானது ஆசியகோப்பை தொடரில் பங்கேற்க ஆகஸ்ட் 23-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் பயணிக்க இருக்கிறது. இப்படி ஒரு நாள் இடைவெளியில் டிராவிட் அங்கும் இங்கும் செல்வது அவ்வளவு எளிது கிடையாது.

- Advertisement -

எனவே இந்த சிறிய இடைவெளி காரணமாகவே அவருக்கு தற்போது ஓய்வு அளிக்கப்பட்டு லக்ஷ்மணன் பயிற்சியாளராக இந்திய அணியுடன் செல்கிறார் என்று தெளிவான விளக்கத்தை அளித்தார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இந்த ஜிம்பாப்வே தொடரில் இந்திய அணியில் விளையாடும் கே.எல் ராகுல் மற்றும் தீபக் ஹூடா ஆகியோர் இந்த ஜிம்பாப்வே தொடர் முடிந்த பின்னர் நேரடியாக அங்கிருந்து துபாய் செல்வார்கள் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க : வரலாற்றில் சிறிய கேரியராக இருந்தாலும் பெரிய சாதனை படைத்த 3 இந்திய வீரர்களின் பட்டியல்

லட்சுமணன் இப்படி இந்திய அணியின் இடைக்கால பயிற்சியாளராக செயல்படுவது இது புதிது கிடையாது. ஏனெனில் ஏற்கனவே இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அந்த அணிக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராகவும், இளம் வீரர்களைக் கொண்ட மற்றொரு அணி அயர்லாந்து பயணித்த போது அந்த அணிக்கு லட்சுமணன் பயிற்சியாளராகவும் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement