100 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கும் கோலிக்கு சச்சின், கங்குலி, டிராவிட் வாழ்த்து – என்ன சொல்லியிருங்க?

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது அண்மையில் நடைபெற்று முடிந்த நிலையில் அடுத்ததாக இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை துவங்க உள்ளது மார்ச் 4ஆம் தேதி மொஹாலி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு 100-வது டெஸ்ட் போட்டியாக அமைந்துள்ளது. இதன் காரணமாக வரலாற்று சிறப்புமிக்க இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது.

முன்னதாக விராட் கோலியின் 100-வது டெஸ்ட் போட்டிக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று பிசிசிஐ அறிவித்ததும் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். அதனைத்தொடர்ந்து ரசிகர்கள் எழுப்பிய தொடர் கோரிக்கை காரணமாக தற்போது பி.சி.சி.ஐ மற்றும் மொஹாலி நிர்வாகம் ஆகியவை இணைந்து 50 சதவிகித ரசிகர்களுக்கு போட்டியை நேரில் காண அனுமதி வழங்கியுள்ளது. இதன் காரணமாக தற்போது இந்த டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது 100-வது டெஸ்ட் கிரிக்கெட் விளையாட இருக்கும் விராட் கோலிக்கு உலகெங்கிலுமிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் தற்போது பிசிசிஐ சார்பாக விராட் கோலிக்கு ஒரு சிறப்பு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், தற்போதைய பயிற்சியாளர் டிராவிட், பி.சி.சி.ஐ யின் தலைவர் கங்குலி மற்றும் முன்னாள் வீரர் சேவாக் என பல்வேறு வீரர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்த வீடியோவில் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் விராத் கோலி குறித்து பேசுகையில் :

2007ஆம் ஆண்டு நாங்கள் ஆஸ்திரேலிய தொடரில் விளையாடி கொண்டிருந்தபோது விராட் கோலியை பற்றி முதலில் கேள்விப்பட்டேன். அப்போதே விராட்கோலி திறமை பற்றி நிறைய பேர் பேச ஆரம்பித்துவிட்டனர். அண்டர் 19 உலக கோப்பையில் ஒரு வீரர் சிறப்பாக ஆடி வருவதாகவும் எதிர்காலத்தில் இந்திய அணிக்கு அவரே சிறப்பாக விளையாட போகிறார்கள் என்றும் சக வீரர்கள் என்னிடம் கூறினார்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது விராட் கோலி 100-வது டெஸ்டில் விளையாட இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு எனது வாழ்த்துக்கள் தற்போது வளர்ந்து வரும் பல இளைஞர்களின் ரோல் மாடல் நீங்கள். உங்களை பார்த்து பலர் கிரிக்கெட் விளையாட வந்துள்ளனர். அதுவே உங்களின் பெரிய சாதனை என்று பாராட்டிப் பேசினார். கங்குலி பேசுகையில் : விராட் கோலி 10 ஆண்டுகளுக்கு முன்பு தனது கிரிக்கெட் வாழ்க்கையை துவங்கினார். இன்று அவர் மிகப்பெரிய சாதனையை படைக்க உள்ளார். அவரது இந்த பயணம் மிகவும் சிறப்பானது. பிசிசிஐ சார்பாகவும் இந்திய முன்னாள் கேப்டன் என்ற சார்பாகவும் அவரை பாராட்டுகிறேன் என்று கூறினார்.

இதையும் படிங்க : ஐபிஎல் தொடரால் உங்களுக்கு என்ன பிரச்சனை? – விமர்சிக்கும் வெளிநாட்டவர்களை விளாசும் அஷ்வின்

டிராவிட் கூறுகையில் : இந்திய அணியை தனியாக தூக்கி நிறுத்தியவர் விராட் கோலி. கடந்த 5-6 ஆண்டுகளாக கேப்டனாக சிறப்பாக செயல்பட்டுள்ளார். 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 50 ரன்களுக்கு மேல் சராசரி வைத்திருப்பது பெரிய சாதனை. இன்னும் அவர் நிச்சயம் நிறைய போட்டிகளில் விளையாடுவார் என்று டிராவிட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement