ஐபிஎல் தொடரால் உங்களுக்கு என்ன பிரச்சனை? – விமர்சிக்கும் வெளிநாட்டவர்களை விளாசும் அஷ்வின்

Ashwin
- Advertisement -

கடந்த 2008இல் முதல் முறையாக தோற்றுவிக்கப்பட்ட ஐபிஎல் டி20 தொடர் இன்று உலக அளவில் ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்ற ஒரு கிரிக்கெட் தொடராக விஸ்வரூபம் எடுத்துள்ளது என்று கூறலாம். ஒவ்வொரு போட்டிக்கும் பரபரப்பையும் விறுவிறுப்பையும் கலந்து ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் இந்த தொடரில் பெரும்பாலான போட்டிகளின் வெற்றி கடைசி ஓவர் வரை செல்வதால் ரசிகர்களுக்கு எப்போதுமே ஒரு த்ரில் உணர்வு கிடைக்கிறது.

ipl

- Advertisement -

அதே சமயம் தரத்திலும் சரி வருமானத்திலும் சரி ஐசிசி நடத்தும் உலக கோப்பைகளை விட ஐபிஎல் தொடர் இன்று வானளவு உயர்ந்துள்ளது. தரத்திற்கு எடுத்துக்காட்டாக ஐபிஎல் வருவதற்கு முன்பாக 50 ஓவர்களில் அடிக்கப்பட்ட 250 ரன்கள் இன்று சர்வ சாதாரணமாக 20 ஓவர்களில் அடிக்கப்படுகிறது. அதேபோல் ஐசிசி உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு வழங்கும் பரிசு தொகையை விட கேஎல் ராகுல் போன்ற வீரர்களுக்கு இந்த ஐபிஎல் தொடரில் அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது.

விமர்சிக்கும் வெளிநாட்டவர்கள்:
இதனால் உலக கோப்பையை விட ஐபிஎல் தொடரில் தான் உலகிலேயே மிகச்சிறந்த தொடர் என சுனில் கவாஸ்கர், ஏபி டிவிலியர்ஸ் போன்ற பல ஜாம்பவான்கள் வெளிப்படையாகவே கூறியுள்ளார்கள். இதனால் 14 சீசன்களை தொடர்ந்து 15வது முறையாக இந்த வருடம் நடைபெறும் ஐபிஎல் தொடரில் லக்னோ மற்றும் குஜராத் ஆகிய புதிதாக 2 அணிகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. இதில் லக்னோ அணியின் மதிப்பு மட்டும் 7000 கோடிகளை தாண்டியுள்ளது.

Ganguly-ipl
IPL MI

வெறும் 2 மாதங்கள் நடைபெறும் இந்த தொடரில் விளையாடுவதற்காக கோடிக்கணக்கில் சம்பளம் கொடுக்கப்படுவதால் சமீப காலங்களாக தங்கள் நாட்டுக்கு விளையாடுவதை விட ஐபிஎல் தொடரில் விளையாட பல கிரிக்கெட் வீரர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். இதனால் ஐபிஎல் தொடர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளைப் பழாக்குக்குகிறது என ஒரு சிலர் வெளிநாட்டவர்கள் விமர்சிப்பது தொடர்கதையாக இருந்து வருகிறது.

- Advertisement -

என்ன பிரச்சனை:
இந்நிலையில் ஐபிஎல் தொடரால் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று அதைப் பற்றி விமர்சனம் செய்பவர்களுக்கு தமிழக கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பதிலடி கொடுத்துள்ளார். இதுபற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “2 வாரங்களுக்கு முன்பே இம்முறை ஐபிஎல் தொடங்குவதால் மற்ற நாடுகளுக்கு ஏற்படும் தீமைகள் என்ன? அவர்கள் தங்கள் அட்டவணையை ஏற்கனவே திட்டமிட்டிருப்பார்கள்.

ashwin 1

உதாரணமாக ஐபிஎல் தொடரின் போது இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் ஒருசில நாடுகளுக்கு எதிராக சில ஆட்டங்களில் விளையாடி வருகின்றன. ஐபிஎல் அட்டவணையின் போது இலங்கைக்கு கூட சில சர்வதேச போட்டிகள் உள்ளன. ஆனால் பெரும்பாலும், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகள் ஐபிஎல் போட்டிகளின் அடிப்படையில் தங்கள் சர்வதேச விளையாட்டு அட்டவணையை திட்டமிடுகின்றன. குறிப்பாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் போது நியூசிலாந்து எந்த சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்கவில்லை” என கூறினார்.

- Advertisement -

“கடந்த வருடங்களில் 8 அணிகள் மட்டும் இருந்ததால் 2 மாதங்களுக்குள் நடைபெற்று முடியும் ஐபிஎல் இம்முறை 2 வாரங்களுக்கு முன்னதாகவே துவங்கி 65 நாட்கள் நடைபெற உள்ளது. இருப்பினும் அதனால் உலகின் இதர நாடுகளுக்கு என்ன பிரச்சனை ஏற்படுகிறது என அஸ்வின் கேள்வி எழுப்பினார். இதுபற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “லாரன்ஸ் பூத் எனும் ஆங்கில பத்திரிகையாளர் ஐபிஎல் போட்டிகள் பற்றி ட்வீட் செய்திருந்தார். வருடத்தில் கிட்டத்தட்ட ஆறில் ஒரு பங்கு ஐபிஎல் நடக்கிறது.

Ashwin 2

ஆனால் இங்கிலீஷ் பிரீமியர் லீக் கிட்டத்தட்ட 6 மாத காலம் நடக்கிறது. அதில் போட்டிகளுக்கிடையே வீரர்களுக்கு அதிக இடைவெளி இருக்கும். மேலும் வாரத்திற்கு 1 – 2 போட்டிகள் மட்டுமே இருக்கும். எனவே அந்த நிலைக்கு கிரிக்கெட் வருவது எப்போதுமே பெரிய கேள்விக்குறியாகவே இருக்கும்.
ஆனால் ஐபிஎல் தொடர் கிரிக்கெட்டை நிச்சயம் நல்ல நிலைக்கு கொண்டு செல்லக்கூடிய ஒரு தொடராகும். மேலும் அனைத்து கிரிக்கெட் பார்வையாளர்களுக்கும், கிரிக்கெட் நாடுகளுக்கும் பங்குதாரர்களுக்கும் இது பற்றி ஏற்கனவே தெரியும்” என கூறினார்.

- Advertisement -

இங்கிலாந்தில் நடைபெறும் உள்ளூர் கால்பந்து தொடர் சுமார் ஆறு மாதங்கள் நடைபெறுவதாக கூறியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் தொடர் வெறும் 2 மாதங்கள் மட்டும் நடைபெறும் ஐபிஎல் தொடர் கிரிக்கெட்டை புதிய பரிணாம வளர்ச்சிக்கு எடுத்து செல்வதாக விமர்சனம் செய்பவர்களுக்கு பதிலடி கொடுத்தார்.

ipl-players

திறமையை பாருங்க:
“2008 – 2010 ஆகிய காலகட்டத்தை மீண்டும் திரும்பி பாருங்கள். அந்த சமயங்களில் இந்திய அணிக்காக விளையாட வெறும் 20 – 25 வீரர்கள் மட்டுமே இருந்தார்கள். நான் தொடங்கும் போது கூட எனது பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி என்னிடம் நிதி உதவிக்கு கிரிக்கெட் உதவுமா என்று கேட்டார்கள்.

ஆனால் தற்போது ஐபிஎல் தொடரின் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 75 – 80 பேர் இந்திய கிரிக்கெட்டுக்காக விளையாட உருவாகி காத்திருக்கிறார்கள்” என இது பற்றி மேலும் தெரிவித்த ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் தொடரில் விமர்சனங்களை செய்வதை விட அதன் வாயிலாக எத்தனை இளம் கிரிக்கெட் வீரர்கள் உருவாகிறார்கள் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க : இப்போலாம் இவங்க 2 பேரும் வேறலெவல்ல பவுலிங் பண்றாங்க – புதுமுக வீரர்களை பாராட்டிய ஜாகீர் கான்

இந்தியா மட்டுமல்லாது பல வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களும் கூட இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு சர்வதேச கிரிக்கெட்டில் தங்கள் நாட்டுக்காக ஜொலித்த கதைகள் உள்ளது. மேலும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு கிரிக்கெட் போட்டிகளால் பெரிய அளவில் வருமானத்தைப் பெற முடியாத பல வீரர்கள் இன்று ஐபிஎல் தொடர் வந்ததன் காரணமாக நிறைய சம்பளம் பெற்று தங்களது வாழ்வில் முன்னேறியுள்ளதை பற்றியும் விமர்சனம் செய்பவர்கள் யோசிக்க வேண்டும் என அஸ்வின் கூறினார்.

Advertisement