இப்போலாம் இவங்க 2 பேரும் வேறலெவல்ல பவுலிங் பண்றாங்க – புதுமுக வீரர்களை பாராட்டிய ஜாகீர் கான்

Zaheer
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது அண்மையில் நடைபெற்று முடிந்தது. இது தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணியானது 3-0 என்ற கணக்கில் இலங்கையை ஒயிட்வாஷ் செய்து அபார வெற்றி பெற்றது. இந்தத் தொடரின் போது இந்திய அணியின் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டு இளம் வீரர்களுக்கு அதிகப்படியான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன.

IND-1

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடிய அனைத்து வீரர்களின் ஆட்டமும் சிறப்பாக இருந்ததை நாம் பார்க்க முடிந்தது. இந்திய இளம்வீரர்களின் இந்த சிறப்பான செயல்பாட்டிற்கு முன்னாள் வீரர்கள் பலரும் தங்களுக்கு பிடித்த வீரர்கள் குறித்து அவர்கள் இந்த தொடரில் செயல்பட்ட விதம் குறித்து பாராட்டி பேசியிருந்தனர்.

இவ்வேளையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஜாஹீர் கானும் இந்த இலங்கை தொடரில் சிறப்பாக விளையாடிய இரண்டு இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர்களை பாராட்டியுள்ளார். அந்தவகையில் அவர் கூறியதாவது :

siraj

இந்த டி20 தொடரை இந்திய அணி வெற்றிகரமாக கைப்பற்ற பந்துவீச்சாளர்கள் பெரிய அளவில் உதவினர். குறிப்பாக ஹர்ஷல் படேல் மற்றும் சிராஜ் இருவருமே நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு பின்னர் ஹர்ஷல் படேலின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்திய அணியில் இவரை எந்த நேரத்திலும் பந்துவீச அழைக்கலாம். அந்த அளவிற்கு எந்த ஓவர் வீசினாலும் சிறப்பாக வீசி வருகிறார்.

- Advertisement -

அவருக்கு இந்திய அணியில் தொடர்ச்சியாக வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் சிராஜின் பௌலிங் குறித்து பேசிய அவர் கூறுகையில் : முகமது சிராஜ் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அவர் கடந்து வந்த பாதை மிகவும் நீளமானது. தன் முன் இருந்த தடைகளை எல்லாம் தகர்த்து தற்போது சிறப்பான வழியில் அவர் சென்று கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க : உலககோப்பை 2022 : கோப்பை வெல்லுமா இந்தியா?- வரலாற்று புள்ளிவிவரம், அட்டவணை, – எந்த சேனலில் பார்க்கலாம்

தனக்கு எப்போதெல்லாம் அணியில் வாய்ப்பு கிடைக்கிறதோ அந்த வாய்ப்புகளை எல்லாம் சரியாக பயன்படுத்தி அவரது திறமையை முன்கொண்டு செல்ல எப்போதுமே அவர் தயாராக உள்ளார் என்று இவர்கள் இருவரையும் ஜாஹீர் கான் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement