உலககோப்பை 2022 : கோப்பை வெல்லுமா இந்தியா?- வரலாற்று புள்ளிவிவரம், அட்டவணை, – எந்த சேனலில் பார்க்கலாம்

Worldcup
- Advertisement -

ஆடவர் கிரிக்கெட்டுக்கு ஈடுகொடுக்கும் வண்ணம் மகளிர் கிரிக்கெட் போட்டிகளுக்கான உலக கோப்பையையும் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐசிசி நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்த வருடத்துக்கான ஐசிசி மகளிர் உலககோப்பை 2022 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 4ஆம் தேதி முதல் நியூசிலாந்து நாட்டில் கோலாகலமாக துவங்கி ஏப்ரல் 3ஆம் தேதி வரை ஒரு மாதம் நடைபெற உள்ளது.

ICC Women's World Cup 2022

- Advertisement -

லீக் சுற்று மற்றும் நாக்அவுட் சுற்று என மொத்தம் 31 போட்டிகள் நடைபெறும் இந்த தொடரில் போட்டியை நடத்தும் நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா போன்ற உலகின் டாப் 8 அணிகள் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்த உலக கோப்பையின் லீக் சுற்று போட்டிகள் நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து, கிரைஸ்ட்சர்ச், டுனிடின், ஹமில்டன், மௌன்ட் மௌங்கனி, வெலிங்டன் ஆகிய முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளது.

குறிப்பாக வரும் மார்ச் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்த உலக கோப்பையின் அரையிறுதி போட்டிகள் மற்றும் ஏப்ரல் 3ஆம் தேதி நடக்கும் மாபெரும் இறுதி போட்டி ஆகியன வெலிங்டன் மற்றும் கிறிஸ்ட்சர்ச் ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளது. இந்த உலக கோப்பையின் லீக் சுற்றில் இடம்பிடித்துள்ள 8 அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இறுதியில் லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்று பின்னர் இறுதிப்போட்டியில் 2 அணிகள் விளையாட உள்ளன.

womens

வரலாற்று புள்ளிவிவரம்:
கடந்த 1973ஆம் ஆண்டு முதல் முறையாக இங்கிலாந்தில் நடைபெற்ற இந்த உலகக்கோப்பை கடைசியாக அதே இங்கிலாந்தில் கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்றது. வரலாற்றில் இதுவரை மொத்தம் 11 உலக கோப்பைகள் நடைபெற்றுள்ள நிலையில் இந்த வருடம் 12வது முறையாக நியூசிலாந்தில் நடைபெற உள்ளது.

- Advertisement -

வரலாற்றில் இதுவரை நடைபெற்ற 11 உலக கோப்பைகளில் அதிகபட்சமாக ஆஸ்திரேலியா 6 முறை சாம்பியன் பட்டம் வென்று வெற்றிகரமான அணியாக விளங்குகிறது. அதற்கு அடுத்தபடியாக 4 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள இங்கிலாந்து 2வது இடத்தில் உள்ளது. இந்த 2 அணிகளை தவிர்த்து நியூசிலாந்து மட்டுமே கடந்த 2000ம் ஆண்டு இந்த உலகக் கோப்பையை முதலும் கடைசியுமாக வென்றது. அதேபோல் கடைசியாக கடந்த 2017ஆம் ஆண்டு தனது சொந்த மண்ணில் நடந்த உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து நடப்பு சாம்பியனாக உள்ளது.

inianwomescrick

கோப்பை வெல்லுமா இந்தியா:
இந்த உலக கோப்பை வரலாற்றில் இந்தியா ஒரு முறை கூட சாம்பியன் பட்டம் வாங்கியதே கிடையாது. கடந்த 2005ஆம் ஆண்டு முதல் முறையாக இறுதிப் போட்டி வரை சென்ற இந்தியா தோல்வி அடைந்தது. அதன்பின் மீண்டும் கடந்த 2017ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலகக்கோப்பையில் லீக் மற்றும் அரையிறுதிப் போட்டிகளில் அசத்திய மிதாலி ராஜ் தலைமையிலான இந்தியா பைனல் வரை சென்று இங்கிலாந்திடம் பரிதாப தோல்வி அடைந்தது.

- Advertisement -

கடந்த 1999ஆம் ஆண்டு இந்திய மகளிர் கிரிக்கெட்டில் அறிமுகனாகி படிப்படியாக உயர்ந்து கடந்த பல வருடங்களாக கேப்டன்ஷிப் செய்துவரும் மிதாலி ராஜ் இந்திய மகளிர் கிரிக்கெட்டின் லேடி சச்சின் டெண்டுல்கர் என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். ஏனெனில் அவரைப்போலவே கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் இந்தியாவிற்காக விளையாடி வரும் மிதாலி ராஜ் சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள், அதிக சதங்கள் அடித்த வீராங்கனை போன்ற பல உலக சாதனைகளை படைத்துள்ளார். இருப்பினும் அவரால் இதுநாள் வரை ஒரு உலக கோப்பையை வெல்ல முடியவில்லை.

indianwomescricket

எனவே தற்போது 39 வயதை கடந்துள்ள அவர் இந்தியாவிற்காக கேப்டன்ஷிப் செய்யும் கடைசி உலகக்கோப்பை இதுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் பல வருடங்கள் தவித்து வந்த ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது கடைசி முயற்சியில் கடந்த 2011ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்றது போல இந்த வருடம் தனது கடைசி வாய்ப்பில் மிதாலி ராஜ் உலக கோப்பையை வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே காணப்படுகிறது.

- Advertisement -

இந்திய அணி விவரம்:
அதற்கு ஏற்றார் போல இந்திய அணியில் ஹர்மன்பிரீட் கவூர், ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா, ஸ்னே ராணா என நிறைய திறமை வாய்ந்த வீராங்கனைகள் இருப்பதால் நீண்ட நாட்களாக இந்தியாவிற்கு பணியாற்றிவரும் மிதாலி ராஜ்க்கு கடைசி வாய்ப்பில் எப்படியாவது உலக கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என சில இந்திய கூறுகிறார்கள்.

Mithali 2

மகளிர் உலககோப்பை 2022 தொடரில் பங்கேற்கும் இந்திய அணி இதோ:
மித்தாலி ராஜ் (கேப்டன்), ஹர்மன்ப்ரீட் கௌர் (துணை – கேப்டன்), ஸ்ம்ரிதி மந்தனா, ஷபாலி வர்மா, யஸ்டிகா பாட்டியா, தீப்தி சர்மா, ரிச்சா கோஸ் (கீப்பர்), ஸ்னே ராணா, ஜூலன் கோஸ்வாமி, பூஜா வஸ்திரக்கர், மேக்னா சிங், ரேணுகா சிங் தாகூர், தானியா பாட்டியா (கீப்பர்), ராஜேஸ்வரி கைக்வாட், பூனம் யாதவ்.

இந்தியாவின் அட்டவணை:
ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த உலக கோப்பையின் முதல் போட்டியில் போட்டியை நடத்தும் நியூசிலாந்து மற்றும் 6 முறை சாம்பியன் பட்டம் வென்ற வலுவான ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் மார்ச் 4ஆம் தேதி மோதவுள்ளன. அதேபோல் இந்த உலக கோப்பையில் இந்தியா தனது முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை வரும் மார்ச் 6ஆம் தேதியன்று மௌன்ட் மௌங்கனி நகரில் எதிர்கொள்கிறது. அத்துடன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற வலுவான அணிகளுக்கு எதிராகவும் இந்தியா அடுத்தடுத்த விளையாட உள்ளது.

IND-Womens

ஐசிசி மகளிர் உலககோப்பை 2022 தொடருக்கான இந்திய அணியின் அட்டவணை இதோ:
பாகிஸ்தான் V இந்தியா, மார்ச் 6, அதிகாலை 6.30 மணி, மௌன்ட் மௌங்கனி.
நியூஸிலாந்து V இந்தியா, மார்ச் 10, அதிகாலை 6.30 மணி, ஹமில்டன்.
வெஸ்ட்இண்டீஸ் V இந்தியா, மார்ச் 12, அதிகாலை 6.30 மணி, ஹமில்டன்.
இங்கிலாந்து V இந்தியா, மார்ச் 16, அதிகாலை 6.30 மணி, மௌன்ட் மௌங்கனி.
இந்தியா V ஆஸ்திரேலியா, மார்ச் 19, அதிகாலை 6.30 மணி, ஆக்லாந்து.
இந்தியா V வங்கதேசம், மார்ச் 22, அதிகாலை 6.30 மணி, ஹமில்டன்.
இந்தியா V தென்ஆப்பிரிக்கா, அதிகாலை 6.30 மணி, கிறிஸ்ட்சர்ச்.

இதையும் படிங்க : இது ஒன்னும் சாதாரண விஷயம் இல்ல. விராட் கோலியின் 100 ஆவது டெஸ்ட் குறித்து – பும்ரா நெகிழ்ச்சியான கருத்து

எதில் பார்க்கலாம்:
இந்திய நேரப்படி அதிகாலை 6.30 மணிக்கு துவங்கும் இந்த அனைத்து போட்டிகளும் இந்தியாவில் இருக்கும் ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் ஆப் வாயிலாக நேரடியாக கண்டு களிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement