அதிர்ஷ்டமான இந்தியா மட்டும் தப்பிச்சுடுவாங்க.. அது மற்ற சர்வதேச அணிகளை அழிக்கப்போகுது.. பசித் அலி கவலை

Basit Ali NZ
- Advertisement -

ஐபிஎல் தொடர் கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவில் துவங்கப்பட்டது. அது குறுகிய காலத்திலேயே தரத்திலும் பணத்திலும் விஸ்வரூபம் எடுத்தது. அதன் காரணமாக பிசிசிஐக்கு கோடிக்கணக்கான ரூபாய்கள் வருமானமும் பல வீரர்களுக்கு சம்பளமும் கிடைக்கிறது. அதைப் பார்த்து தற்போது இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா உட்பட அனைத்து நாடுகளும் தங்களுக்கென்று ஒரு புதிய டி20 தொடரை துவங்கியுள்ளன.

அதில் ஓரிரு மாதங்கள் விளையாடுவதற்கு உயர்ந்த சம்பளமும் கொடுக்கப்படுகிறது. அதனால் தற்போது பெரும்பாலான வீரர்கள் நாட்டுக்காக விளையாடுவதை விட டி20 லீக் தொடர்களில் விளையாட முன்னுரிமை கொடுக்கின்றனர். இது போக அமெரிக்கா, அமீரகம், கனடா போன்ற உறுப்பு நாடுகளிலும் புதிய டி20 தொடர்கள் துவங்கப்பட்டுள்ளன.

- Advertisement -

இந்தியா தப்பிக்கும்:
அதனால் டி20 லீக் தொடர்களில் விளையாடுவதற்காக ஜேசன் ராய், ட்ரெண்ட் போல்ட், கேன் வில்லியம்சன் போன்ற நட்சத்திர வீரர்கள் தங்களது தேசிய அணியின் மத்திய ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியுள்ளனர். அந்த வரிசையில் நேற்று டேவோன் கான்வே, லாக்கி பெர்குசன், ஃபின் ஆலன் ஆகிய 3 முக்கிய வீரர்கள் நியூசிலாந்து அணியின் மத்திய சர்வதேச ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளனர். இது நியூசிலாந்து அணியின் வீழ்ச்சிக்கு வித்திடும் விதையாகவே பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் டி20 லீக் தொடர்கள் சர்வதேச கிரிக்கெட்டை அழிக்கும் காலம் துவங்கியுள்ளதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் பசித் அலி கவலை தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்தியா மட்டும் தங்களுடைய வீரர்களை வெளிநாட்டில் விளையாட அனுமதிப்பதில்லை. எனவே அதிலிருந்து இந்தியா தப்பிப்பதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இலங்கைத் தொடரில் விளையாட மாட்டேன் என்று கான்வே தெரிவித்துள்ளார். இது நியூசிலாந்து மட்டும் தனியாக சந்திக்கும் பிரச்சினை கிடையாது. வருங்காலங்களில் இதே நிலையை மற்ற அணிகளும் சந்திக்கலாம். பாகிஸ்தான் வீரர்களும் இதை செய்யலாம். ஏனெனில் டி20 லீக் தொடர்களில் நிறைய பணம் கிடைக்கிறது. அதனால் அதன் மீது மோகம் உள்ளது”

இதையும் படிங்க: ரிங்குவையும் காணல.. ஆஸ்திரேலியாவில் ஜெய்க்க காரணமான அவரை கூடவா கம்பீர் மறந்துட்டாரு.. பசித் அலி அதிருப்தி

“இந்த விஷயத்தில் இந்தியா மட்டும் அதிர்ஷ்டமிக்கவர்கள். ஏனெனில் ஐபிஎல் தவிர்த்து அவர்கள் வேறு எங்கேயும் விளையாடுவதில்லை. இந்த டி20 தொடர்கள் நிற்கப் போவதில்லை. அது சர்வதேச கிரிக்கெட்டை குறிப்பாக டெஸ்ட் போட்டிகளை அழிக்கும். நீண்ட நேரம் நின்று விளையாடும் திடமான பேட்ஸ்மேன்களுக்கு அது மெதுவான விஷம் போன்றது. எனவே இந்தியாவை தவிர்த்து டி20 கிரிக்கெட்டால் பல நாடுகள் பாதிக்கப்படலாம். பணம் வெல்லும் கிரிக்கெட் தோற்கும்” என்று கூறினார்.

Advertisement