ரிங்குவையும் காணல.. ஆஸ்திரேலியாவில் ஜெய்க்க காரணமான அவரை கூடவா கம்பீர் மறந்துட்டாரு.. பசித் அலி அதிருப்தி

Basit Ali India 2
- Advertisement -

துலீப் கோப்பை 2024 உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி பெங்களூருவில் துவங்குகிறது. அதில் விளையாடுவதற்காக ஸ்ரேயாஸ் ஐயர், அபிமன்யு ஈஸ்வரன், ருதுராஜ், சுப்மன் கில் ஆகியோர் தலைமையில் 4 அணிகளை சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டது. குறிப்பாக இந்திய அணி அடுத்ததாக வங்கதேசம், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடுத்தடுத்த டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது.

எனவே அதற்கு தயாராகும் நோக்கத்தில் துலீப் கோப்பையில் கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா போன்ற நட்சத்திர சீனியர் வீரர்கள் விளையாடுகின்றனர். அதே போல ஜெய்ஸ்வால், ரியான் பராக் போன்ற ஜூனியர் வீரர்களும் விளையாடுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த அணியில் தமிழ்நாட்டிலிருந்து வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர், சாய் சுதர்சன், ஜெகதீசன், பாபா அபாரஜித் போன்றவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

ஆச்சர்யமான தேர்வு:
இருப்பினும் அந்த அணிகளில் சீனியர்களான புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் கழற்றி விடப்பட்டுள்ளனர். கடந்த 10 வருடங்களாக டெஸ்ட் அணியில் முக்கிய வீரர்களாக செயல்பட்ட அவர்கள் சமீபத்திய வருடங்களில் பெரிய ரன்கள் குவிக்கவில்லை. அதனால் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவர்களை கழற்றி விட்ட தேர்வுக்குழு சர்பராஸ் கான் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்தது.

இதன் காரணமாக 36 வயதாகும் புஜாரா மற்றும் ரஹானே ஆகியோரின் இந்திய கேரியர் முடிந்ததாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய மண்ணில் 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் இந்தியா டெஸ்ட் தொடரை வெல்ல புஜாரா முக்கிய பங்காற்றியதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் பசித் அலி கூறியுள்ளார். ஆனாலும் அவர்களை இத்தொடரில் கௌதம் கம்பீர் தேர்ந்தெடுக்காதது ஆச்சரியமளிப்பதாக அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “துலீப் கோப்பை அணிகளை நானும் பார்த்தேன். அங்கே 3 – 4 வீரர்கள் இல்லாதது ஆச்சரியமளிக்கிறது. குறிப்பாக ரஹானே, புஜாரா இல்லை. சஞ்சு சாம்சன், ரிங்கு சிங்கும் இல்லை. சிவம் துபே ஆல் ரவுண்டராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். துலீப் கோப்பையில் யார் அசத்தப்போகிறார் என்பதை பார்ப்போம்”

இதையும் படிங்க: எனக்கு மறுபடியும் ஐ.பி.எல் தொடரில் விளையாட ஆசையா இருக்கு.. அதானால் மறுபடியும் அதை செய்வேன் – ஸ்டீவ் ஸ்மித் பேட்டி

“புஜாரா ஆஸ்திரேலியாவில் மிகவும் பயனுள்ளவராக இருப்பார். கௌதம் கம்பீர் பயிற்சியாளராக இருந்தும் அவர் தேர்ந்தெடுக்கப்படாதது எனக்கு ஆச்சரியமளிக்கிறது. அதே போல ரிங்கு சிங் இல்லாததும் ஆச்சரியம். இந்த தேர்வுகளில் கௌதம் கம்பீர் முக்கிய பங்காற்றியுள்ளார்” என்று கூறினார். அவர் கூறுவது போல 2018/19இல் தொடர்நாயகன் விருது வென்ற புஜாரா ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக இந்தியா தொடரை வெல்ல உதவியது குறிப்பிடத்தக்கது.

Advertisement