ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மோசமான சாதனைக்கு ஆளான நெதர்லாந்து வீரர் – ரொம்ப பாவங்க இவரு

Bas-De-Leede
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2023-ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மிகப்பெரிய அணியாக மற்ற அணிகளுக்கு கடுமையான போராட்டத்தை அளித்து தென் ஆப்பிரிக்கா அணியையே வீழ்த்திய நெதர்லாந்து அணியானது இன்று அக்டோபர் 25-ஆம் தேதி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 24-வது லீக் போட்டியில் பங்கேற்று விளையாடியது.

கடந்த போட்டிக்கு முன்னதாக தென் ஆப்பிரிக்கா போன்ற பலமான அணியையே வீழ்த்திய அவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று சிறிய போராட்டத்தையாவது அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் இன்று நடைபெற்று முடிந்த இந்த ஆட்டத்தில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நெதர்லாந்து அணியானது 309 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை தழுவி மாபெரும் பின்னடைவை சந்தித்து மீண்டும் புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தை பிடித்துள்ளது.

அதன்படி இன்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 399 ரன்களை குவித்தது. பின்னர் 400 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நெதர்லாந்து அணியானது 90-ரன்களில் சுருண்டு 309 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது நெதர்லாந்து அணி சார்பாக விளையாடிய ஆல்ரவுண்டர் பாஸ் டி லீடு உலககோப்பை போட்டிகள் மட்டுமின்றி ஒட்டுமொத்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் சேர்த்து மோசமான சாதனை ஒன்றினை படைத்து மோசமான பந்துவீச்சாளர் என்ற பட்டியலிலும் முதலிடம் பிடித்துள்ளார். அந்த வகையில் இந்த போட்டியின் போது 10 ஓவர்கள் வீசிய அவர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தாலும் 115 ரன்கள் விட்டுக்கொடுத்திருந்தார்.

இதையும் படிங்க : அவர எங்களால நிறுத்தவே முடில.. அதை கொஞ்சம் மிஸ் பண்ணிட்டோம்.. படுதோல்விக்கு பின் நெதர்லாந்து கேப்டன் பேட்டி

இதன்மூலம் ஒரே போட்டியில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த மோசமான பவுலர் என்ற சாதனையை அவர் படைத்தார். இதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய வீரர் மைக் லீவிஸ் என்பவர் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக 10 ஓவரில் 113 ரன்கள் விட்டுக் கொடுத்திருந்தார். அதேபோல ஆடம் ஜாம்பாவும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 113 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார். ஆனால் இவர்கள் இருவரையும் கடந்த பாஸ் டி லீடு இந்த பேட்டியில் 115 ரன்கள் விட்டுக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement