விராட் கோலி ரசிகர்களுக்கு இன்று நேர்ந்த சோகம், சீண்டிய இங்கிலாந்தை வெளுக்கும் ரசிகர்கள் – என்ன நடந்தது?

IND-vs-ENG
- Advertisement -

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி கடந்து 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக இந்தியா மற்றும் ஐபிஎல் தொடரில் வகித்து வந்த கேப்டன்ஷிப் பொறுப்புகளை படிப்படியாக ராஜினாமா செய்து சாதாரண வீரராக விளையாடத் தொடங்கிய போதிலும் முன்னேற்றத்தை காண முடியாத அவர் ஐபிஎல் 2022 தொடரில் 3 கோல்டன் டக் அவுட்டானது, சமீபத்திய இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ஒரு அரைசதம் கூட அடிக்காதது என முன்பை விட சுமாராக செயல்படுகிறார். அதனால் பொறுமையிழந்த கபில் தேவ் போன்ற முன்னாள் வீரர்கள் பெரிய பெயரை வைத்துக் கொண்டு எத்தனை நாட்கள் அணியில் காலத்தை தள்ளுவீர்கள் என்ற வகையில் அணியிலிருந்து நீக்குமாறு வெளிப்படையாகவே விமர்சித்துள்ளார்கள்.

இருப்பினும் கடந்த 10 வருடங்களாக 3 வகையான இந்திய அணியிலும் தனது அபார பேட்டிங் திறமையாக உலகின் அனைத்து இடங்களிலும் உலகத்தரம் வாய்ந்த பவுலர்களையும் அற்புதமாக எதிர்கொண்ட விராட் கோலி 23000+ ரன்களையும் 70 சதங்களையும் விளாசி நிறைய சரித்திர வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து ஏற்கனவே தன்னை ஜாம்பவனாக நிரூபித்துள்ளார். அதனால் இங்கு ஜாம்பவான் என்ற பெயருடைய நிறைய முன்னாள் வீரர்கள் கனவில் கூட 70 சதங்களை நினைத்துப் பார்க்க முடியாது என்ற வகையில் கெவின் பீட்டர்சன், பிரைன் லாரா, ரிக்கி பாண்டிங் போன்ற நிறைய வெளிநாட்டு ஜாம்பவான்கள் விமர்சனத்தையும் மிஞ்சும் ஆதரவு கொடுக்கின்றனர்.

- Advertisement -

14 வருடங்கள்:
மேலும் கடந்த பல வருடங்களாக தொடர்ச்சியாக விளையாடி வரும் அவர் பணிச்சுமையால் பாதிக்கப்பட்டுள்ளதால் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய தொடர்களில் ஓய்வெடுத்து அடுத்ததாக வரும் ஆகஸ்ட் 27இல் துவங்கும் ஆசிய கோப்பையில் களமிறங்க தயாராகி வருகிறார். அந்த நிலைமையில் கடந்த 2008இல் மலேசியாவில் நடைபெற்ற ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையை வென்றதால் கடந்த 2008 ஆகஸ்ட் 18ஆம் தேதியன்று இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியின் வாயிலாக முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி அறிமுகமானார்.

ஆரம்பத்தில் தடுமாறினாலும் அப்போதைய கேப்டன் தோனியின் ஆதரவுடன் ஒருசில போட்டிகளிலேயே மிகச் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி நிலையான இடத்தைப் பிடித்த அவர் 2011 முதல் 3 வகையான இந்திய அணியிலும் முதுகெலும்பு பேட்ஸ்மேனாக உருவெடுத்து ஏராளமான வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து வருகிறார்.

- Advertisement -

தற்போது 33 வயது மட்டுமே நிரம்பியுள்ள அவர் இந்த வயதிலேயே 70 சதங்கள், 23726 ரன்கள், ஏராளமான வெற்றிகள், 2011 உலக கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபி வின்னர், 2 ஆசிய கோப்பை வின்னர், 57 ஆட்டநாயகன் விருதுகள், 19 தொடர் நாயகன் விருதுகள், 2010 – 2019 தசாப்தத்தின் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர், 2 ஐசிசி கிரிக்கெட்டர் விருதுகள், அர்ஜுனா, பத்மஸ்ரீ, கேல் ரத்னா போன்ற விருதுகளை வென்று காலத்தால் அழிக்கமுடியாத காவியத் தலைவனாக சாதனை படைத்துள்ளார்.

கொண்டாடிய ரசிகர்கள்:
அப்படி 14 வருடங்களில் இந்தியாவுக்கு ஏராளமான வெற்றிகளை பெற்றுக்கொடுத்த சரித்திர நாயகனின் 14 வருட வருகையை நேற்று சமூக வலைதளங்களில் நிறைய ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். குறிப்பாக அதே 14 வருடங்களில் சர்வதேச் கிரிக்கெட்டில் 427 போட்டிகளில் 21522 ரன்களை 49.24 என்ற சராசரியில் எடுத்துள்ள சச்சினை 463 போட்டிகளிலேயே 2376 ரன்களை 53.55 என்ற சராசரியில் எடுத்து மிஞ்சும் வகையில் செயல்பட்டு வரும் விராட் கோலி இந்த மோசமான தருணத்தில் ஆதரவை பெறுவதற்கு தகுதியானவர் என்று நிறைய ரசிகர்கள் அன்பை வெளிப்படுத்தினார்கள்.

- Advertisement -

மேலும் பகலானால் இரவு வரும் என்பது போல் வரலாற்றில் சச்சின் போன்றவர்களும் இந்த மோசமான தருணங்களைக் கடந்து வந்தவர்கள் என்ற வகையில் இமாலய வளர்ச்சிக்கு பின் மெகா வீழ்ச்சியை சந்தித்ததுள்ள விராட் கோலி நிச்சயம் இதிலிருந்து மீண்டு வருவார் என்றும் பெரும்பாலானவர்கள் ஆதரவு கொடுத்தனர். ஆனால் அதற்கு அடுத்த நாளான ஆகஸ்ட் 19ஆம் தேதியான இன்று சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி சதமடித்து 1000 நாட்கள் நிறைவு பெற்றதை நினைத்து அவரது ரசிகர்கள் கலங்குகின்றனர்.

சீண்டிய இங்கிலாந்து:
கடைசியாக கடந்த 2019 நவம்பர் 23இல் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் சதமடித்திருந்த அவர் அதன்பின் சரியாக கடந்த 1000 நாட்களாக அடுத்த சதமடிக்கவில்லை. இதை இங்கிலாந்து ரசிகர்களின் அதிகாரப்பூர்வ பக்கமான பார்மி ஆர்மி தனது டுவிட்டரில் பதிவிட்டு விராட் கோலியை கலாய்த்தது. ஆனால் கடந்த 3532 நாட்களாக இந்தியாவுக்கு எதிராக இந்திய மண்ணில் எந்த ஒரு தொடரையும் இங்கிலாந்து வெல்லவில்லை என்று இந்திய ரசிகர்கள் அதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.

இதையும் படிங்க : இனிமே வர ஒவ்வொரு போட்டியும் அவருக்கு போர் மாதிரி. சரியாய் ஆடலனா தூக்கிடுவாங்க – முகமது கைப் எச்சரிக்கை

அதேபோல் 2019இல் நியூசிலாந்தை ஏமாற்றி உலக கோப்பையை வென்றவர்கள், வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து போன்ற வெளிநாட்டு வீரர்களை வைத்து உலகக்கோப்பையை வென்றவர்கள் விராட் கோலியை பற்றி பேச தகுதியில்லை என வகை வகையாக இந்திய ரசிகர்கள் இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Advertisement