இனிமே வர ஒவ்வொரு போட்டியும் அவருக்கு போர் மாதிரி. சரியாய் ஆடலனா தூக்கிடுவாங்க – முகமது கைப் எச்சரிக்கை

Kaif
- Advertisement -

இந்திய அணி ரோகித் சர்மாவின் தலைமையில் தற்போது இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பையும், அடுத்த 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் 50 உலகக் கோப்பையும் கைப்பற்றும் நோக்கில் தற்போது பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து அணியை மேலும் பலப்படுத்தி வருகிறது. தொடர்ச்சியாக பல தொடர்களில் இந்திய அணி விளையாடி வருவதால் சீனியர் வீரர்களை கொண்ட ஒரு அணியும் இளம் வீரர்களைக் கொண்ட ஒரு அணியும் தற்போது தனித்தனியாக பங்கேற்று விளையாடி வருகிறது.

KL Rahul IND Deepak Chahar

- Advertisement -

இப்படி தனித்தனியாக அணிகளை பிரித்து விளையாடுவதன் மூலம் சரியான திறமையுள்ள வீரர்களை கண்டுபிடித்து அவர்களை முதன்மை அணியில் இணைக்கவும் இந்த சோதனை முயற்சியானது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது கே.எல் ராகுல் தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியானது தற்போது ஜிம்பாப்வே நாட்டில் பயணித்து அங்கு மூன்று கோட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

இந்த தொடரில் சிறப்பாக செயல்படும் சில வீரர்கள் இனிவரும் தொடர்களில் இந்திய அணியால் ஆதரிக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. அதேவேளையில் இந்த ஜிம்பாப்வே தொடரில் விளையாடும் அனுபவ சீனியர் வீரரான ஷிகார் தவான் இனிவரும் ஒவ்வொரு போட்டியிலும் அவருக்கு ஒரு போர் போன்றது என இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைப் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

இந்திய அணியில் தற்போது ஏகப்பட்ட வீரர்கள் விளையாடுகின்றனர். அதில் சிறப்பாக விளையாடி வரும் ஷிகார் தவானுக்கு மட்டும் தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஐபிஎல் தொடரில் 6000-க்கும் மேற்பட்ட ரன்களை குவித்த தவானுக்கு இந்திய டி20 அணியில் ஏன் வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்று எனக்கு தெரியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடரில் 500 முதல் 600 ரன்கள் வரை அவர் அடிக்கிறார்.

- Advertisement -

ஆனாலும் அவர் டி20க்கு இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படாமல் இருக்கிறார். அவர் டி20 கிரிக்கெட் விளையாட தகுதி இல்லாதவர் வீரர் என்று கூற முடியுமா? உங்களால் முடியாது என்று தெரிவித்துள்ளார். அதேபோன்று தற்போது ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வரும் தவான் இங்கிலாந்து தொடரில் சற்று சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இனி வரும் ஒவ்வொரு போட்டியும் அவருக்கு போர் மாதிரி தான். ஏதாவது ஒரு தொடரில் சொதப்பினால் கூட அவருக்கு இந்திய அணி நிர்வாகம் ஒருநாள் கிரிக்கெட்க்கான வாய்ப்பையும் தர மறுக்கும் என முகமது கைஃப் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : IND vs ZIM : இந்திய அணியை மேலும் வலு சேர்த்து வெற்றி பெற 2வது ஒருநாள் போட்டியில் செய்யப்பட வேண்டிய 4 மாற்றங்கள்

அவர் கூறியது போன்றே தற்போது டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து முற்றிலுமாக ஓரம் கட்டப்பட்ட தவான் பேருக்கு ஒருநாள் போட்டிகளில் சில தொடர்களில் கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டு வருகிறார். நிச்சயம் அவர் எதாவது ஒரு தொடரில் சொதப்பினால் கூட அவருடைய 36 வயதை முன்னிலைப்படுத்தி அவரை ஓரங்கட்டவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement