IND vs ZIM : இந்திய அணியை மேலும் வலு சேர்த்து வெற்றி பெற 2வது ஒருநாள் போட்டியில் செய்யப்பட வேண்டிய 4 மாற்றங்கள்

INDvsZIM
- Advertisement -

ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. பலவீனமான எதிரணி என்பதால் ரோகித் சர்மா போன்ற முக்கிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள இத்தொடரில் கேஎல் ராகுல் தலைமையில் பெரும்பாலும் இளம் வீரர்களைக் கொண்ட இந்தியா களமிறங்கியுள்ளது. ஆகஸ்ட் 18ஆம் தேதியான நேற்று தலைநகர் ஹராரேயில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வேவை துல்லியமாக பந்துவீசி மடக்கிப்பிடித்த இந்தியா வெறும் 189 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கியது. சிகந்தர் ராசா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் சகப்வா 35 ரன்களை எடுத்தார்.

- Advertisement -

இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக அக்சர் பட்டேல், தீபக் சஹர் மற்றும் பிரஸித் கிருஷ்ணா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். இறுதியில் 190 என்ற சுலபமான இலக்கை துரத்திய இந்தியாவுக்கு நங்கூரமாக பேட்டிங் செய்த தொடக்க வீரர்கள் ஷிகர் தவான் 81* (114) ரன்களும் சுப்மன் கில் 82* (72) ரன்களும் குவித்து 192/0 ரன்களை எடுக்க வைத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்றுக் கொடுத்தனர். இந்த வெற்றிக்கு காயத்திலிருந்து திரும்பி அபாரமாக பந்துவீசிய தீபக் சஹர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியால் 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ள இந்தியா ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறும் 2வது போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3 மாற்றங்கள்:
மறுபுறம் ஜிம்பாப்வேவுக்கு வென்றாக வேண்டிய கட்டாயத்தால் வெற்றிக்கு போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்தியா வெல்வது உறுதி என்று எதிர்பார்க்கப்படும் இப்போட்டியில் அணியை மேலும் வலுப்படுத்த செய்ய வேண்டிய சில மாற்றங்களைப் பார்ப்போம்:

Avesh Khan 1

4. சிராஜ் – ஆவேஷ்: டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமாக செயல்பட்டு நிலையான இடத்தைப் பிடித்துள்ள முகமது சிராஜ் ஒருநாள் கிரிக்கெட்டிலும் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சிறப்பாக செயல்பட்டார். நேற்றைய போட்டியிலும் 8 ஓவர்களில் 36 ரன்களை மட்டும் கொடுத்த அவர் 1 விக்கெட் எடுத்து சிறப்பாக செயல்பட்டார். இருப்பினும் விரைவில் நடைபெறும் ஆசிய கோப்பையில் இவரது பெயர் இடம் பெறவில்லை என்ற நிலைமையில் இளம் வீரர் ஆவேஷ் கான் இடம் பிடித்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரன்களை வாரி வழங்கிய இவருக்கு ஹர்ஷல் படேல் காயமடைந்ததால் ஆசிய கோப்பையில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே அந்த முக்கிய தொடருக்கு தயாராவதற்காக அடுத்த போட்டியில் சிராஜ்க்கு பதில் இவருக்கு வாய்ப்பளிப்பது நல்ல முடிவாக இருக்கும்.

Shardul-Thakur

3. கிருஷ்ணா – தாகூர்: சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரன்களை வாரி வழங்கியதால் பெஞ்சில் அமர வைக்கப்பட்டு இவர் நேற்றைய முதல் போட்டியில் 3 விக்கெட்டுகளை எடுத்தாலும் கொஞ்சமும் முன்னேற்றமடையாமல் 8 ஓவர்களில் இதர இந்திய பவுலர்களை காட்டிலும் 50 ரன்களை 6.25 என்ற சுமாரான எக்கனாமியில் பந்து வீசினார்.

- Advertisement -

அப்படி மீண்டும் கொடுக்கப்பட்ட வாய்ப்பில் மீண்டும் சுமாராக செயல்பட்ட இவருக்கு பதில் சமீப காலங்களில் “லார்ட் தாகூர்” என ரசிகர்களால் கொண்டாடப்படும் ஷார்துல் தாகூருக்கு வாய்ப்பு கொடுப்பது அணியை வலுப்படுத்தும் என்று கூறலாம். ஏனெனில் எதிரணி பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்தால் அதை உடைக்கும் பந்து வீச்சாளரான அவர் பேட்டிங்கில் லோயர் மிடில் ஆர்டரில் கணிசமான ரன்களை சேர்ப்பவராக உள்ளார்.

kl rahul

2. கில் – ராகுல்: சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தொடர் நாயகன் விருது வென்று வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார் என்பதற்காக இந்த தொடரிலும் ஷிகர் தவானுடன் தொடக்க வீரராக களமிறங்கிய சுப்மன் கில் 82* ரன்கள் குவித்து வெற்றிபெற வைத்தார். அப்படி ஏற்கனவே நல்ல பார்மில் இருக்கும் இவர் இந்திய அணியில் நிலையான இடத்தை பிடிக்கும் அளவுக்கு சமீபத்திய போட்டிகளில் அட்டகாசமாக செயல்பட்டுள்ளார்.

- Advertisement -

மறுபுறம் 2 மாதங்கள் காயத்திலிருந்து அணிக்கு திரும்பியுள்ள கேஎல் ராகுல் ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அந்த முக்கிய தொடருக்கு முன்பாக 2 மாதங்களாக களமிறங்கி விளையாடாமல் இருக்கும் அவர் முதல் போட்டியிலும் வாய்ப்பு பெறாத காரணத்தால் 2வது போட்டியில் சுப்மன் கில்லுக்கு பதில் தொடக்க வீரராக களமிறங்கி பழைய பார்மில் இருக்கிறோமா என்பதை தனக்குத் தானே சோதித்துப் பார்ப்பது அவசியமாகிறது.

Rahul-Tripathi

1. கில் – திரிபாதி: எனவே சுப்மன் கில்லுக்கு ஓய்வளித்து விட்டு ராகுல் விளையாடயிருந்த மிடில் ஆர்டரில் பல நாள் போராட்டத்திற்கு பின் அணிக்கு தேர்வாகியுள்ள ராகுல் திரிப்பாதிக்கு வாய்ப்பு கொடுப்பது சரியான முடிவாக இருக்கும்.

இதையும் படிங்க: 2023 உலகக்கோப்பையில் இவர்தான் இந்திய அணியின் முக்கிய வீரராக இருப்பார் – சபா கரீம் கருத்து

கடந்த சில வருடங்களாகவே ஐபிஎல் மற்றும் உள்ளூர் தொடரில் அசத்தி வரும் இவர் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் முதல் முறையாக தேர்வாகி வாய்ப்பை பெறவில்லை என்பதால் இப்போது வாய்ப்பு கொடுப்பது சரியாக இருக்கும்.

Advertisement