ஐசிசி உலக கோப்பை 2023 : அப்செட் செய்வதை தாண்டி ஏதேனும் சாதிக்கும் தரம் இருக்கா.. வங்கதேச அணியின் முழுமையான அலசல்

Bangladesh team
- Advertisement -

ஐசிசி 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக செயல்பட்டு புதிய சாம்பியனாக சாதனை படைப்பதற்காக அனைத்து அணிகளும் தயாராகியுள்ளன. அதில் சொந்த மண்ணில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற டாப் அணிகள் கோப்பையை வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் கணித்து வருகின்றனர். அந்த அணிகளுக்கு சவாலை கொடுத்து வங்கதேசம் கோப்பையை வெல்வதற்கு வாய்ப்புள்ளதா என்பதை பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

முதலில் பல சர்ச்சைக்கு மத்தியில் அனுபவ வீரர் தமீம் இக்பால் காயத்தால் விலகியுள்ளது வங்கதேசத்திற்கு நிச்சயமான பின்னடைவாகும். இருப்பினும் அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள சாகிப் அல் ஹசன் உலக அளவில் உலக அளவில் மிகச் சிறந்த சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டர்களில் ஒருவராக திகழ்கிறார். குறிப்பாக கடந்த உலகக் கோப்பையில் 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து சிறப்பாக செயல்பட்ட அவர் வங்கதேசத்தின் ஆணிவேராகவும் பார்க்கப்படுகிறார்.

- Advertisement -

வங்கதேச அணி:
அதே போல துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள லிட்டன் தாஸ் துவக்க வீரராக அடித்து நொறுக்கும் திறமையை பெற்றிருக்கும் நிலையில் நஜ்முல் சாண்டோ அவருக்கு ஈடு கொடுக்கக்கூடிய மற்றொரு துவக்க வீரராக இருக்கிறார். மேலும் மிடில் ஆர்டரில் தன்சித் ஹசன், ஹ்ரிடோய் ஆகியோர் சமீபத்திய தொடர்களில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி நம்பிக்கையை கொடுக்கின்றனர்.

அவர்களை விட முஸ்பிக்கர் ரஹீம் மற்றும் முகமதுல்லா ஆகியோர் நீண்ட காலமாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவத்தை கொண்டிருப்பதால் நிச்சயம் மிடில் ஆர்டரில் பலத்தை சேர்ப்பவர்களாக இருக்கின்றனர். மேலும் கடந்த டிசம்பரில் இந்தியாவை 2 – 1 என்ற கணக்கில் தோற்கடிப்பதற்கு ஆல் ரவுண்டராக அசத்திய மெஹதி ஹசன் லேட்டஸ்ட் நம்பிக்கை நட்சத்திரமாக பலம் சேர்க்கிறார்.

- Advertisement -

அத்துடன் முஸ்தபிசுர் ரகுமான், தஸ்கின் அஹ்மத் ஆகியோர் உலகின் டாப் பேட்ஸ்மேன்களை திணறுடிக்கும் அளவுக்கு சிறந்த வேக்கப்பந்து வீச்சாளர்களாக இருக்கிறார்கள். இவர்களுடன் மெகிதி ஹசன், சோரிபுல் இஸ்லாம், டன்சின் சாகிப், ஹசன் மஹ்மத், நசுன் அஹ்மத் ஆகியோரும் வங்கதேசம் அணியின் பந்து வீச்சு துறையில் போராடுவதற்கு தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மொத்தத்தில் அனைத்து துறைகளிலும் ஓரளவு அசத்தக்கூடிய நல்ல வீரர்கள் வங்கதேச அணியில் நிறைந்து இருக்கின்றனர்.

இதையும் படிங்க: தரமான பவுலர் தான்.. ஆனா அதிக ரன்களை லீக் பண்ணிடுவாரு..2023 உ.கோ ப்ளேயிங் லெவனில் அவரை சேர்க்காதீங்க.. உத்தப்பா கோரிக்கை

இருப்பினும் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக விளையாடியும் இன்னும் முதிர்ச்சி தன்மையை எட்டாமல் இருக்கும் அணியாக கருதப்படும் வங்கதேசம் 2007 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு தோல்வியை பரிசளித்து வீட்டுக்கு அனுப்புவதில் முக்கிய பங்காற்றியது. ஆனாலும் தொடர்ந்து அசத்துவதில் காலம் காலமாக தடுமாறி வரும் அந்த அணி இம்முறையும் சில டாப் அணிகளுக்கு ஆச்சரியமான தோல்விகளை பரிசளிக்கக்கூடிய அணியாக மட்டுமே இருக்குமே தவிர கோப்பையை வெல்லும் அளவுக்கு தரமாக இல்லை என்பதே க்ரிக்தமிழ் இணையத்தின் அலசலாகும்.

Advertisement