இலங்கை அணிக்கெதிராக பெற்ற வெற்றியின் மூலம் வங்கதேச அணி படைத்த மாபெரும் சாதனை – விவரம் இதோ

BAN-vs-SL
- Advertisement -

இந்தியாவில் கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி துவங்கிய 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கிட்டத்தட்ட லீக் சுற்று போட்டிகள் முடியும் தருவாயில் இருக்கும் வேளையில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய இரண்டு அணிகள் மட்டுமே தற்போது அரையிறுதிக்கு அதிகாரபூர்வமாக தகுதி பெற்றுள்ளன. அதனை தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களுக்கான போட்டி பலமாக நிலவி வருகிறது.

அவர்களை தவிர்த்து இந்த உலகக் கோப்பை தொடரில் பங்களாதேஷ், இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் அதிகாரப்பூர்வமாக அரையிறுதி வாய்ப்பை இழந்த வேளையில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கான கடும் போட்டி நிலவி வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடரில் பெரிய அணிகளை அச்சுறுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட பங்களாதேஷ் அணியானது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாதது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்தது.

இருப்பினும் நேற்று நடைபெற்ற 38-வது லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை எதிர்த்து விளையாடிய வங்கதேச அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அவர்களை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. இலங்கை அணி இந்த உலகக் கோப்பை தொடர் முழுவதுமே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வேளையில் பங்களாதேஷ் அணியிடமும் தோல்வியை சந்தித்தது அந்நாட்டு ரசிகர்களிடைய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் நேற்றைய போட்டியில் இலங்கையை வீழ்த்திய வங்கதேச அணி மாபெரும் சாதனை ஒன்றினையும் நிகழ்த்தியுள்ளது. அந்த வகையில் உலக கோப்பை போட்டிகளில் முதல்முறையாக இலங்கை அணியை வீழ்த்தி தங்களது வெற்றியை பதிவு செய்துள்ளது. அதேபோன்று ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கை அணிக்கு எதிராக வங்காளதேச அணி செய்த அதிகபட்ச சேசிங்காக இது அமைந்துள்ளது.

இதையும் படிங்க : பவுலிங்கிற்கு கொஞ்சமும் ஹெல்ப் இல்லாத இந்த பிட்ச்ல அவங்க 2 பேர் விக்கெட்டையும் எடுத்ததில் ஹேப்பி – ஆட்டநாயகன் ஷாகிப்

நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி 279 ரன்களை குவிக்க பின்னர் 280 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வங்கதேச அணி அற்புதமாக அந்த இலக்கினை 41.1 ஓவர்களிலேயே துரத்தி 3 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்து குறிப்பிடத்தக்கது.

Advertisement