அவர் மட்டும் கொஞ்சம் பொறுப்பா ஆடிருந்தா.. இந்தியாவை ஜெயிச்சுருப்போம்.. வங்கதேச கேப்டன் பேட்டி

Najmul Santo
- Advertisement -

ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 19ஆம் தேதி புனேவில் நடைபெற்ற 17வது லீக் போட்டியில் வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் சாகிப் அல் ஹசன் இல்லாத நிலைமையில் சராசரியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 ஓவர்களில் 256/8 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 66, தன்சித் ஹசன் 51, முகமதுல்லா 46 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா, முஹம்மது சிராஜ், பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதை தொடர்ந்து 257 என்ற இலக்கை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா – கில் ஆகியோர் 88 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர். அதில் ரோகித் சர்மா அதிரடியாக 48 (40) ரன்களில் அவுட்டாக அடுத்த சில ஓவர்களில் சுப்மன் கில்லும் 53 (55) ரன்களில் அவுட்டாகி சென்றார்.

- Advertisement -

வலுவான இந்தியா:
அந்த நிலைமையில் விராட் கோலி சிறப்பாக விளையாடிய போதிலும் எதிர்புறம் வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 19 ரன்கள் ஆட்டமிழந்தார். ஆனாலும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய விராட் கோலி சதத்தை நெருங்கிய போது கேஎல் ராகுலின் உதவியுடன் 6 பவுண்டரி 4 சிக்சருடன் 103* (97) ரன்கள் குவித்து இந்தியாவை எளிதாக வெற்றி பெற வைத்தார். அவருடன் ராகுல் 34* (34) ரன்கள் எடுத்ததால் 41.3 ஓவரிலேயே இலக்கை எட்டிய இந்தியா 4 போட்டிகளில் தொடர்ந்து 4வது வெற்றியை பதிவு செய்து செமி ஃபைனல் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.

மறுபுறம் கேப்டன் சாகிப் அல் ஹசன் இல்லாத நிலைமையில் சுமாராக விளையாடிய வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக மெகதி ஹசன் 2 விக்கெட்டுகள் எடுத்தும் வெற்றி காண முடியவில்லை. இந்நிலையில் வலுவான இந்தியாவை தோற்கடிக்கும் அளவுக்கு தேவையான ஸ்கோரை பேட்டிங்கில் ஃபினிஷிங் செய்து எடுக்காதது தோல்வியை கொடுத்ததாக வங்கதேச கேப்டன் நஜ்மல் சான்டோ தெரிவித்துள்ளார்.

- Advertisement -

குறிப்பாக 66 ரன்கள் எடுத்த சீனியர் வீரர் லிட்டன் தாஸ் பொறுப்புடன் கடைசி வரை விளையாடிருந்தால் வெற்றிக்கான வாய்ப்பு கிடைத்திருக்கும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி போட்டியின் முடிவில் பேசியது பின்வருமாறு. “இந்தியா எப்போதும் நல்ல வலுவான அணி என்பதை இன்று காட்டியுள்ளனர். அனைத்துமே நல்ல அணிகளாகும். நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடவில்லை என்று நினைக்கிறேன். வருங்காலங்களில் சிறப்பாக விளையாடுவோம் என்று நம்புகிறேன். சாகிப் காயத்திலிருந்து கிட்டத்தட்ட குணமடைந்துள்ளதால் அடுத்த போட்டியில் விளையாடுவார்”

இதையும் படிங்க: இதுக்கு மேலேயும் நீங்க சத்தமா காத்த போறீங்க. வெற்றிக்கு பின்னர் ரசிகர்களை குஷி படுத்திய – கேப்டன் ரோஹித் சர்மா

“தன்சித் சிறப்பாக பேட்டிங் செய்தது போலவே பவுலர்களும் செயல்பட்டனர். ஆனால் பேட்டிங்கில் நாங்கள் ஃபினிஷிங் செய்யவில்லை என்பதை பிரச்சினையாகும். குறிப்பாக லிட்டன் தாஸ் இன்னும் சற்று அதிக நேரம் விளையாடியிருந்தால் இது வித்தியாசமான போட்டியாக இருந்திருக்கும். அவரைப் போலவே பேட்டிங் துறை பொறுப்புடன் விளையாடியிருக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement