கில் போராட்டம் வீண்.. ஃபைனலுக்கு முன் இந்தியா 2 சொதப்பல்.. 11 வருடதிற்கு பின் வங்கதேசத்திடம் அவமான தோல்வியை பெற்றது எப்படி?

IND vs BAN 2
- Advertisement -

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 15ஆம் தேதி நடைபெற்ற கடைசி சூப்பர் 4 போட்டியில் ஏற்கனவே வெளியேறிய வங்கதேசத்தை முதல் அணியாக ஃபைனலுக்கு தகுதி பெற்ற இந்தியா எதிர்கொண்டது. இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசம் 50 ஓவர்களில் போராடி 265/8 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு ஹசன் 13, லிட்டன் தாஸ் 0, அனமல் ஹைக் 4, மெஹதி ஹசன் 13 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அதனால் 59/4 என சுமாரான துவக்கத்தை பெற்ற அந்த அணிக்கு 5வது விக்கெட்டுக்கு 101 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய கேப்டன் சாகிப் அல் ஹசன் 80 ரன்களும் தவ்ஹீத் ஹ்ரீடாய் 51 ரன்களும் எடுத்தனர். அந்த உத்வேகத்தில் லோயர் மிடில் ஆர்டரில் நசும் அஹ்மத் 44, மெகிதி ஹசன் 29* ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாவதை தவிர்த்து வங்கதேசத்துக்கு சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தனர்.

- Advertisement -

இந்தியா தோல்வி:
மறுபுறம் சுமாராகவே பந்து வீசிய இந்தியா சர்துள் அதிகபட்சமாக சர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளையும் முகமது ஷமி 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். அதை தொடர்ந்து 266 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு முதல் ஓவர்லே கேப்டன் ரோகித் சர்மா டக் அவுட்டாகி ஏமாற்ற அடுத்ததாக வந்த திலக் வர்மா அறிமுகப் போட்டியில் 5 ரன்களில் நடையை கட்டி பின்னடைவை ஏற்படுத்தினார். இருப்பினும் மறுபுறம் சிறப்பாக செயல்பட்ட சுப்மன் கில்லுடன் சேர்ந்து 3வது விக்கெட்டுக்கு 56 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கேஎல் ராகுல் 19 ரன்களில் அவுட்டாகி சென்றார்.

அடுத்த சில ஓவர்களில் அடுத்ததாக வந்த இசான் கிசான் 5 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அடுத்ததாக வந்த சூரியகுமார் யாதவ் முடிந்தளவுக்கு மெதுவாக விளையாட முயற்சித்தும் 26 (34) ரன்களில் சாகிப் சுழலில் சிக்கினார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய சுப்மன் கில் வங்கதேச பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு சதமடித்து இந்தியாவின் வெற்றிக்கு போராடினார்.

- Advertisement -

ஆனால் அப்போது கை கொடுக்க வேண்டிய ரவீந்திர ஜடேஜா 7 ரன்னில் அவுட்டாகி ஏமாற்ற அடுத்த சில ஓவரிலேயே கில்லும் 8 பவுண்டரி 5 சிக்சருடன் 121 (133) ரன்களில் அவுட்டானதால் போட்டியில் பரபரப்பு ஏற்படுத்தியது. அந்த பரபரப்பில் கடைசி 6 ஓவரில் 56 ரன்கள் தேவைப்பட்ட போது அக்சர் படேல் அதிரடியை துவங்கி மெஹதி ஹசன் வீசிய 48வது ஓவரின் கடைசி 2 பந்துகளில் 6, 4 ரன்கள் அடித்து போராடினார்.

அதனால் இந்தியா வெற்றியை நெருங்கிய போதிலும் முஸ்தபிசுஃர் ரஹ்மான் வீசிய 49வது ஓவரின் முதல் ஓவரில் சர்துல் தாக்கூர் 11 ரன்களில் அவுட்டாக அடுத்த சில பந்துகளில் அக்சர் பட்டேலும் போராடி 42 (34) ரன்களில் அவுட்டானார். இறுதியில் முஹம்மது சமியும் 6 ரன்னில் அவுட்டானதால் 49.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்தியா 259 ரன்கள் மட்டுமே எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இதையும் படிங்க: 13 போர்ஸ் 13 சிக்ஸ்.. 416 ரன்கள்.. 57 பந்தில் க்ளாஸென் சரவெடி சதம்.. ஆஸியை கருணை காட்டாமல் ஓடவிட்ட தென்னாப்ரிக்கா

அதனால் ஆறுதல் வெற்றியுடன் தொடரை நிறைவு செய்த வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக முஸ்தபிசுர் ரஹ்மான் 3 விக்கெட்கள் எடுத்தார். சொல்லப்போனால் இதன் வாயிலாக சச்சின் 100வது சதமடித்த போட்டி இடம் பெற்ற 2012க்குப்பின் 11 வருடங்களுக்கு முதல் முறையாக ஆசிய கோப்பையில் வங்கதேசத்திடம் இந்தியா அவமான தோல்வியை சந்தித்துள்ளது. இதற்கு 59/4 என சரிந்த வங்கதேசத்தை ஆல் அவுட் செய்யாத அளவுக்கு பந்து வீச்சில் சொதப்பிய இந்தியா பேட்டிங்கில் கில் தவிர்த்து இதர வீரர்கள் சொதப்பியதால் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்ததே தோல்விக்கு முக்கிய காரணமானது.

Advertisement