13 போர்ஸ் 13 சிக்ஸ்.. 416 ரன்கள்.. 57 பந்தில் க்ளாஸென் சரவெடி சதம்.. ஆஸியை கருணை காட்டாமல் ஓடவிட்ட தென்னாப்ரிக்கா

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை அதற்காக பின் வாங்காமல் 3வது போட்டியில் வென்று பதிலடி கொடுத்தது. அதனால் 2 – 1* (5) என்ற கணக்கில் இருக்கும் இந்த தொடரின் முக்கியமான 4வது போட்டி செப்டம்பர் 15ஆம் தேதி செஞ்சூரியன் நகரில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்காவுக்கு 64 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ஹென்றிக்ஸ் 28 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அவருடன் மறுபுறம் தம்முடைய பங்கிற்கு நிதானமாக செயல்பட்ட குவிண்டன் டீ காக் 45 ரன்களில் அவுட்டானார். அந்த நிலைமையில் வந்த கேப்டன் ஐடன் மார்க்ரம் 8 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தாலும் அடுத்ததாக வந்த ஹென்றிச் க்ளாஸென் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய ஆஸ்திரேலிய பவுலர்களை புரட்டி எடுத்தார்.

- Advertisement -

சரவெடி சதம்:
அவருடன் மறுபுறம் 4வது விக்கெட்டுக்கு 74 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த வேன் டெர் டுசன் 7 பவுண்டரி 2 சிக்சருடன் 62 (65) ரன்கள் ஆட்டமிழந்தார். அந்த நிலைமையில் வந்த டேவிட் மில்லருடன் ஜோடி சேர்ந்த க்ளாஸென் தொடர்ந்து ஆஸ்திரேலிய பவுலர்களை பந்தாடி வரும் 57 பந்துகளிலேயே அதிரடியான சதமடித்து தென் ஆப்பிரிக்காவை வலுப்படுத்தினார்.

குறிப்பாக 79 ரன்களில் இருந்த அவர் 6, 2, 6, 6, 1 என அதிரடியான ரன்களை விளாசி சதமடித்து ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தினார். அவருக்கு நிகராக மறுபுறம் டேவிட் மில்லர் தம்முடைய பலத்தை காட்டும் வகையில் ஆஸ்திரேலிய பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு விரைவாக அரை சதமடித்து தென் ஆப்பிரிக்காவை 350 ரன்கள் தாண்ட உதவினார்.

- Advertisement -

இதே வேகத்தில் நேரம் செல்ல செல்ல கடைசி கட்ட ஓவர்களில் ஆஸ்திரேலிய பவுலர்களுக்கு கருணை காட்டாமல் முரட்டுத்தனமாக அடித்த இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 222 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து 50 ஓவர்களில் தென்னாபிரிக்கா 416/5 ரன்கள் குவிக்க உதவியது. அதில் வெறித்தனமாக விளையாடிய கிளாஸென் 13 பவுண்டரி 13 சிக்ஸருடன் 174 (83) ரன்களை 209.64 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி கடைசி பந்தில் அவுட்டாக மறுபுறம் டேவிட் மில்லர் தனது பங்கிற்கு 6 பவுண்டரி 5 சிக்சருடன் 82* (45) ரன்கள் குவித்து ஃபினிஷிங் செய்தார்.

இதையும் படிங்க: ரசித் கான், அஜந்தா மெண்டிஸ் மாதிரி மிஸ்டரி செய்யாமலேயே.. அவர் உலகின் நம்பர் ஒன் பவுலரா இருக்காரு – ஆகாஷ் சோப்ரா பாராட்டு

அதிலும் 32 ஓவரின் முடிவில் 24 (25) ரன்கள் எடுத்த க்ளாசேன் 50 ஓவரின் முடிவில் 174 (83) ரன்கள் எடுத்து முரட்டுத்தனமாக அடித்தார். அதே போல முதல் 32 ஓவரில் 157/3 ரன்கள் எடுத்த தென்னாபிரிக்கா அடுத்த 18 ஓவரில் 259/2 ரன்கள் எடுத்து தெறிக்க விட்டது. அந்தளவுக்கு வள்ளலாக ரன்களை கொடுத்த ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஜோஸ் ஹேசல்வுட் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

Advertisement