ரசித் கான், அஜந்தா மெண்டிஸ் மாதிரி மிஸ்டரி செய்யாமலேயே.. அவர் உலகின் நம்பர் ஒன் பவுலரா இருக்காரு – ஆகாஷ் சோப்ரா பாராட்டு

Aakash Chopra.jpeg
- Advertisement -

ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ஏற்கனவே 7 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா 8வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வருகிறது. அதில் இதுவரை நடைபெற்ற லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா முதல் அணியாக செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெறும் பைனலுக்கு தகுதி பெற்ற அசத்தியுள்ளது. 2023 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இந்த தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு நல்ல ஃபார்மில் இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

அதே போல காயத்திலிருந்து குணமடைந்து கேஎல் ராகுல் அசத்திய சுழல் பந்து வீச்சு துறையில் குல்தீப் யாதவ் அபாரமாக செயல்பட்டு எதிரணிகளை திணறடித்து வருகிறார். சொல்லப்போனால் அழுத்தமான சூப்பர் 4 சுற்றில் சவாலான பாகிஸ்தானுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை எடுத்து 228 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வரலாறு காணாத வெற்றியை காண்பதற்கு கருப்பு குதிரையாக செயல்பட்ட அவர் இலங்கைக்கு எதிரான போட்டியிலும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

நம்பர் ஒன் பவுலர்:
அந்த வகையில் ஃபைனல் செல்வதற்கு பெரிய உதவியை செய்த அவர் 2023 உலகக் கோப்பைக்கு முன்பாக அட்டகாசமான ஃபார்மில் இருப்பது இந்திய அணிக்கு மிகப்பெரிய வலுவாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக 2019 உலகக் கோப்பைக்கு பின் ஃபார்மை இழந்ததால் கழற்றி விடப்பட்ட அவர் தற்போது அதிலிருந்து மீண்டெழுந்து முன்பை விட அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு தம்முடைய சைனாமேன் பவுலிங்கை பயன்படுத்தி எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்து வருகிறார்.

மேலும் அதை பயன்படுத்தி உலகிலேயே அதிவேகமாக 150 ஒருநாள் விக்கெட்களை எடுத்த இடது கை ஸ்பின்னர் என்ற சாதனையும் அவர் கடந்த போட்டியில் படைத்தார். இந்நிலையில் சுழலில் மாயாஜாலம் நிகழ்த்திய அஜந்தா மெண்டிஸ் தற்போது நிகழ்த்தும் ரசித் கான் போன்றவர்களைப் போல் பெரியயளவில் மாயாஜாலம் செய்யவில்லை என்றாலும் அவர்களுக்கு நிகராக குல்தீப் யாதவ் உலக அளவில் நம்பர் ஒன் ஸ்பின்னராக செயல்பட்டு வருவதாக ஆகாஷ் சோப்ரா பாராட்டியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “தற்சமயத்தில் உலக அளவில் குல்தீப் சிறந்த ஸ்பின்னராக இருக்கிறார் என்று நான் கருதுகிறேன். அவருடைய புள்ளி விவரங்களை பார்த்தாலும் குல்தீப் சிறந்த விக்கெட் டேக்கராக இருக்கிறார் என்பதை காண்பிக்கும். நாம் ஒருநாள் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகளை எடுத்த ஸ்பின்னர்களைப் பற்றி பேசுகிறோம்”

இதையும் படிங்க: லெஜெண்ட் கபில் தேவின் மகத்தான சாதனை சமன் செய்த்து – இர்பான் பதான் ஆல் டைம் சாதனையை தகர்த்த ஜடேஜா

“முதலில் 150 விக்கெட்டுகள் என்பது சிறிதல்ல நல்ல நம்பர்களாகும். அதிலும் அவர் 85 இன்னிங்ஸில் 30.1 என்ற ஸ்டிரைக் ரேட்டில் 150 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். மேலும் தன்னுடைய பவுலிங் ஆக்சனால் அவர் ஸ்பெஷலாக இருக்கிறார். அஜந்தா மெண்டிஸ், ரஷித் கான் ஆகியோர் மாயாஜாலத்தை கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர் மாயாஜாலம் இல்லாமலேயே சாதாரண லெக் ஸ்பின் மற்றும் கூக்லி பந்துகளை வீசி பேட்ஸ்மேன்களை வலையில் விழ வைக்கிறார்” என்று கூறினார்.

Advertisement