BAN vs ENG : உலக டி20 சாம்பியன் வலுவான இங்கிலாந்தை தோற்கடித்த வங்கதேசம், புதிய வரலாற்று சாதனை

EnG vs BAN
- Advertisement -

வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அங்கு அந்த அணிக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அதில் வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறும் 2023 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் வென்ற இங்கிலாந்து 2 – 1 (3) என்ற கணக்கில் கோப்பையை வென்றது. மறுபுறம் சொந்த மண்ணில் தொடரை இழந்தாலும் கடைசி போட்டியில் சிறப்பாக செயல்பட்ட வங்கதேசம் ஆறுதல் வெற்றி பெற்று ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்த்தது. அந்த நிலையில் இந்த சுற்றுப்பயணத்தில் அடுத்ததாக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மார்ச் 9ஆம் தேதி துவங்கியது.

சட்டோகிராம் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு தொடங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு பவர் பிளே ஓவர்களில் கேப்டன் பட்லருடன் இணைந்து அதிரடியாக செயல்பட்டு 80 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அனைத்து நல்ல தொடக்கம் கொடுத்த பிலிப் சால்ட் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 38 (35) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

வரலாற்று வெற்றி:
அடுத்து வந்த டேவிட் மாலன் 4 (7) பென் டூக்கெட் 20 (13) என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாக மறுபுறம் நங்கூரகமாவும் அதிரடியாகவும் செயல்பட்ட கேப்டன் ஜோஸ் பட்லரும் 4 பவுண்டரி 4 சிக்சருடன் 67 (42) ரன்கள் குவித்து முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார். அதை பயன்படுத்திய வங்கதேசம் டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசி சாம் கரண் 6 (11), கிறிஸ் ஓக்ஸ் 1 (2), மொய்ன் அலி 8* (7) என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களை அதிரடி காட்ட விடாமல் குறைந்த ரன்களில் கட்டுப்படுத்தியது.

அதனால் ஒரு கட்டத்தில் 16 ஓவரில் 135 ரன்கள் எடுத்திருந்ததால் குறைந்தது 175 ரன்கள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து இறுதியில் 20 ஓவர்களில் 156/6 ரன்கள் மட்டுமே எடுத்தது. வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக ஹஸன் முகமது 2 விக்கெட் எடுத்தார். அதை தொடர்ந்து 156 ரன்களை துரத்திய வங்கதேசத்துக்கு ரோனி தாலுக்தார் 21 (14) லிட்டன் தாஸ் 12 (10) என தொடக்க வீரர்கள் குறைவான ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

ஆனால் அடுத்ததாக ஜோடி சேர்ந்து 3வது விக்கெட்டுக்கு அதிரடியான 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ரன் ரேட்டை கட்டுப்படுத்திய நஜ்முல் சான்டோ 8 பவுண்டரியுடன் 51 (30) ரன்களும் தவ்ஹீத் ஹ்ரிடி 2 பவுண்டரி 1 சிக்சருடன் 24 (17) ரன்களும் எடுத்து திருப்பு முனையை ஏற்படுத்தி அவுட்டானார்கள். அதை வீணடிக்காமல் அடுத்து வந்த சாகிப் அல் ஹசன் 34* (24) ரன்களும் 15* (13) ரன்களும் எடுத்து சூப்பர் பினிஷிங் கொடுத்ததால் 18 ஓவர்களிலேயே 158/4 ரன்கள் எடுத்த வங்கதேசம் 6 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்றது.

இதனால் டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக முதல் முறையாக ஒரு வெற்றியை பதிவு செய்து வங்கதேசம் சிறப்பான சாதனையும் படைத்துள்ளது. பொதுவாகவே கத்துக்குட்டியாக அறியப்படும் வங்கதேசம் வரலாற்றில் முதலும் கடைசியுமாக கடந்த 2021 டி20 உலக கோப்பையில் இங்கிலாந்தை எதிர்கொண்டு 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அந்த நிலையில் வரலாற்றில் முதல் முறையாக இவ்விரு அணிகளும் இப்போது தான் இரு தரப்பு தொடர்களில் மோதுகின்றன.

இதையும் படிங்க: IND vs AUS : 13 ஆண்டுகள் கழித்து இந்திய மண்ணில் அசத்தலான சாதனையை நிகழ்த்திய – உஸ்மான் கவாஜா

அதில் முதல் போட்டியிலேயே நடப்பு உலக சாம்பியனாக ஜோப்ரா ஆர்ச்சர், கிறிஸ் ஓக்ஸ், கிறிஸ் ஜோர்டான் போன்ற தரமான பவுலர்களுடன் ஜோஸ் பட்லர் தலைமையில் வலுவான அணியாக திகழும் இங்கிலாந்தை தோற்கடித்துள்ள வங்கதேசம் கத்துக்குட்டியாக இருந்தாலும் தங்களை சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. அதனால் 1 – 0* (3) என்ற கணக்கில் பின்னடைவை சந்தித்துள்ள இங்கிலாந்து இத்தொடரின் அடுத்த 2 போட்டிகளில் வென்று தங்களை உலக டி20 சாம்பியன் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

Advertisement