IND vs BAN : இந்திய அணிக்கு எதிராக கத்துக்குட்டி வங்கதேச அணி படைத்த வரலாற்று சாதனை – விவரம் இதோ

Bangladesh
- Advertisement -

வங்கதேச நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் கடந்த நான்காம் தேதி நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் மோசமான தோல்வியை பதிவு செய்த இந்திய அணியானது இன்று நடைபெற்று வரும் இரண்டாவது போட்டியிலும் தோல்வியை நோக்கி நகர்ந்து வருகிறது. அதேவேளையில் இந்திய அணிக்கு எதிரான இந்த தொடரில் வங்கதேச அணி வீரர்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Siraj

- Advertisement -

முதல் போட்டியில் பிரமாதமான வெற்றியை பெற்ற வங்கதேச அணி இன்றைய இரண்டாவது போட்டியிலும் அசத்தலாக செயல்பட்டு வருகிறது. அதன்படி இன்று டிசம்பர் 7-ஆம் தேதி டாக்கா மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது போட்டியில் முதலில் விளையாடிய பங்களாதேஷ் அணியானது 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்கள் குவித்தது.

பங்களாதேஷ் அணி சார்பாக மெஹதி ஹாசன் ஆட்டம் இழக்காமல் 100 ரன்களும், முகமதுல்லா 77 ரன்களையும் அடித்தனர். இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக வேறு எந்த அணியும் படைக்காத மாபெரும் வரலாற்று சாதனையை கத்துக்குட்டி அணியான வங்கதேச அணி நிகழ்த்தியுள்ளது அனைவரது மத்தியிலும் வரவேற்பினை பெற்றுள்ளது.

Mahmudullah

அந்த வகையில் இந்த போட்டியின் போது 69 ரன்கள் எடுத்த நிலையில் 6 விக்கெட்டுகளை இழந்த வங்கதேச அணியானது 150 ரன்களை கூட தொடாது என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ஏழாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த முகமதுல்லா மற்றும் மெஹதி ஹாசன் ஜோடி மிக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

- Advertisement -

அவர்களது சிறப்பான பார்ட்னர்ஷிப் காரணமாக அந்த அணி பெரிய ரன் குவிப்பை நோக்கி சிறிது சிறிதாக அதிகரித்தது. இறுதியாக அவர்கள் இருவரது பார்ட்னர்ஷிப் ஏழாவது விக்கெட்டிற்கு 148 ரன்கள் சேர்த்தது. அப்போது 77 ரன்கள் எடுத்த முகமதுல்லா ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதையும் படிங்க : யாரும் கவலைப்படாதீங்க. காயமடைந்த ரோஹித் சர்மாவை மோசமாக கலாய்க்கும் ரசிகர்கள் – என்ன ஆனது?

இதன் காரணமாக ஏழாவது விக்கெட்டிற்கு இந்திய அணிக்கு எதிராக அதிக பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை சேர்த்த அணியாக வங்கதேச அணி (148 ரன்கள்) தற்போது சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement