INDvsBAN : ஒருவேளை போட்டி 7 ஆவது ஓவரிலேயே நின்னு இருந்தா இந்தியாவுக்கு சங்கு தான் – இதை கவனிச்சீங்களா?

Rain
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான சூப்பர் 12 சுற்றின் முக்கியமான போட்டி இன்று அடிலெயிடு கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. பரபரப்பாக நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் இந்திய அணியானது ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை வலுப்படுத்தியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்ததால் இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்தது.

Virat Kohli IND vs BAN

- Advertisement -

அதன்படி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணியானது 184 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக விராட் கோலி 64 ரன்கள் அடித்து அசத்தினார். அதனை தொடர்ந்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பங்களாதேஷ் அணியானது எளிதில் இந்திய அணியிடம் வீழ்ந்துவிடும் என்று எதிர்பார்த்த வேளையில் இறுதிவரை போராடி கடைசியில் ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் மட்டுமே தோல்வியை தழுவியது.

இந்த போட்டியின் போது பங்களாதேஷ் அணி விளையாடிக் கொண்டிருக்கையில் இடையில் மழை பாதித்ததால் போட்டி 16 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 16 ஓவர்களில் 151 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்ட வேளையில் 6 விக்கெட்டுகளை இழந்த பங்களாதேஷ் அணி 145 ரன்கள் வரை குவித்ததால் 5 ரன்கள் வித்தியாசத்தில் மட்டுமே தோல்வியை தழுவியது.

Rain

இந்த போட்டியின் போது வங்காளதேச அணி சேசிங் செய்கையில் முதல் 7 ஓவர்களில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக லிட்டன் தாஸ் மிக அதிரடியாக விளையாடிய 21 பந்துகளில் 50 ரன்களை பூர்த்தி செய்தார். ஒரு கட்டத்தில் வங்கதேச அணி 7 ஓவர்களில் இருக்கும்போது விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் குவித்திருந்தது. அப்போது தான் போட்டியின் இடையே மழை பெய்தது.

- Advertisement -

இதையும் படிங்க : IND vs BAN : நல்லவேளை ரன் அவுட் ஆயிட்டாரு. இல்லனா இந்தியா தோத்தே போயிருக்கும் – பயம்காட்டிய பங்களாதேஷ் வீரர்

ஆனால் மழை பெய்த சிறிது நேரத்திலேயே மீண்டும் போட்டி துவங்கியதால் போட்டி 16 ஓவர்களாக குறைக்கப்பட்டு இந்திய அணி வெற்றியும் பெற்றது. ஒருவேளை அந்த ஏழு ஓவர்களோடு போட்டி முற்றிலுமாக மழையால் பாதிக்கப்பட்டிருந்தால் டக் வொர்த் லூயிஸ் முறைப்படி வங்கதேச அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement