IND vs ENG : 5வது டெஸ்டில் விராட் கோலி இத்தனை ரன்களை அடிப்பார் – முன்னாள் ஜாம்பவான் வீரர் நம்பிக்கை

Kohli
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்கும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ரத்து செய்யப்பட்ட கடைசி போட்டி ஜூலை 1-ஆம் தேதியன்று பர்மிங்காம் நகரில் துவங்குகிறது. கடந்த வருடம் உலகின் நம்பர்-1 டெஸ்ட் அணியாக விராட் கோலி தலைமையில் வெற்றி நடை போட்ட இந்தியா ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்தை வீழ்த்தி 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை பெற்றபோது தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தற்போது நடைபெறப்போகும் அந்த போட்டியில் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரோகித் சர்மா ஏற்கனவே விராட் கோலி பெற்றுக் கொடுத்த வெற்றியை பினிஷிங் செய்து 15 வருடங்களுக்கு பின் முதல் முறையாக இங்கிலாந்து மண்ணில் இந்தியாவுக்கு டெஸ்ட் தொடரை வென்று கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

indvseng

- Advertisement -

இருப்பினும் இம்முறை புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள பென் ஸ்டோக்ஸ் தலைமையில் இங்கிலாந்து வலுவான அணியாக மாறியுள்ளதால் இப்போட்டியில் வெல்வது இந்தியாவிற்கு சவாலாகியுள்ளது. இப்போட்டிக்காக கடந்த வாரமே இங்கிலாந்து சென்றடைந்த ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் லீசெஸ்டர்ஷைர் கவுண்டி அணிக்கு எதிராக 4 நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியில் பங்கேற்றனர். அந்த போட்டியின் இடையே கேப்டன் ரோகித் சர்மா கரோனாவால் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளதால் இப்போட்டியில் அவர் களமிறங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சுமாரான விராட்:
இப்போட்டியில் இந்தியா வெல்வதற்கு நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி கேப்டனாக இல்லாவிட்டாலும் பேட்ஸ்மேனாக மபெரிய ரன்களை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு பின் இந்திய பேட்டிங்கின் முதுகெலும்பாக கடந்த பல வருடங்களாக பல சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வரும் அவர் கடந்த 3 வருடங்களாக சதமடிக்க முடியாமல் தவித்து வருகிறார். கடைசியாக கடந்த 2019இல் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதமடித்த அவர் அதன்பின் டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் என அனைத்து வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து 100 போட்டிகளுக்கும் மேல் சதமடிக்க முடியாமல் சுமாரான பார்மில் திண்டாடி வருகிறார்.

Kohli

இத்தனைக்கும் இந்தியாவையும் ஐபிஎல் தொடரில் பெங்களூருவையும் வழிநடத்திய அவர் கேப்டன்ஷிப் அழுத்தம் தனது பேட்டிங்கை பாதித்ததாக உணர்ந்த காரணத்தால் படிப்படியாக அந்த பொறுப்புகளிலிருந்து விலகி கடந்த ஜனவரி முதல் சாதாரண வீரராக விளையாடத் தொடங்கினார். அதனால் சுதந்திரப் பறவையாக செயல்பட்ட அவர் விரைவில் சதமடிப்பார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமே மிஞ்சியது. ஏனென்றால் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற சாதனை படைத்துள்ள அவர் 2022 சீசனில் வரலாற்றிலேயே முதல் முறையாக 3 கோல்டன் டக் அவுட்டாகி முன்பை விட மோசமாக பேட்டிங் செய்தார்.

- Advertisement -

கைக்கொடுக்காத அதிர்ஷ்டம்:
பெரிய அளவில் ரன்கள் எடுக்க வேண்டும் என்பதற்காக கடினமான பயிற்சிகளை மேற்கொண்டு கவனத்துடன் பேட்டிங் செய்யும் அவர் ஏதோ ஒரு வகையில் அதிர்ஷ்டம் கொடுக்காததை போல் அவுட்டானதால் ஒரு கட்டத்தில் வானத்தைப் பார்த்து ‘கடவுளே எனக்கு இன்னும் எத்தனை சோதனை” என்று புலம்பியது ரசிகர்களின் நெஞ்சை உடைத்தது. மேலும் ஓடிஓடி ரன்கள் சேர்த்த களைப்பு அவரின் ஆட்டத்திலும் முகத்திலும் தெரிந்தால் உடனடியாக 2 – 3 மாதங்கள் ஓய்வெடுத்து புத்துணர்ச்சியுடன் பார்முக்கு திரும்புமாறு ரவிசாஸ்திரி போன்ற முன்னாள் வீரர்கள் கேட்டுக்கொண்டனர்.

Virat Kohli

ஆனால் விளையாடினால் தானே பார்முக்கு திரும்ப முடியும் என்று பதிலளித்து தொடர்ந்து விளையாடிய அவர் எந்த முன்னேற்றமும் மாற்றத்தையும் காணவில்லை. அந்த நிலைமையில் தென் ஆப்ரிக்க டி20 தொடரில் ஓய்வெடுத்து குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்ட அவர் தற்போது இங்கிலாந்து போட்டியில் சதம் அடிப்பதற்காக லீசெஸ்டர்ஷைர் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்தியா தடுமாறிய சமயங்களில் சிறப்பாக பேட்டிங் செய்து 2 இன்னிங்ஸ்சிலும் 33, 67 என மொத்தம் 100 ரன்கள் குவித்தார். அதனால் நிச்சயம் பர்மிங்காம் போட்டியில் அவர் பெரிய ரன்களை எடுப்பார் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.

- Advertisement -

நல்ல நேரம் வந்தாச்சு:
இந்நிலையில் விராட் கோலியின் கெட்ட நேரங்கள் முடிந்துவிட்டதாக தெரிவிக்கும் முன்னாள் இந்திய ஜாம்பவான் வீரர் வீரேந்திர சேவாக் 5-வது டெஸ்ட் போட்டியில் நிச்சயம் பெரிய ரன்களை எடுப்பார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுபற்றி சமீபத்திய தொலைகாட்சி நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி எப்போது கடைசியாக சதமடித்தார் என்று உங்களுக்கு நியாபகமிருக்கிறதா? எனக்கு கண்டிப்பாக நியாபகமில்லை”

இதையும் படிங்க : ஜாம்பவான் டான் ப்ராட்மேனை மிஞ்சிய இளம் இந்திய வீரரின் புதிய சாதனை – இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா

“எனவே அந்தப் பெரிய ரன்களை வெற்றியாளரை தீர்மானிக்கப் போகும் பர்மிங்காம் டெஸ்டில் அடிக்க வேண்டுமென்று அவர் நிச்சயம் விரும்புவார். அனேகமாக அவரின் கெட்ட நாட்கள் முடிந்து விட்டதாக நான் நினைக்கிறேன். அடுத்ததாக அவருக்கு நல்ல நாட்கள் வரப்போவதாக உணர்கிறேன். பயிற்சிப் போட்டியில் கூட அவர் 2 இன்னிங்சிலும் அரை சதம் (33, 67) அடித்துள்ளார்” என்று பேசினார்.

Advertisement