விராட், ரோஹித்தை வேற லெவல் குவாலிட்டி ப்ளேயரான.. அவர் தான் 2023 உ.கோ தொடரில் அனலை தெறிக்க விடப்போறாரு – கம்பீர் கருத்து

Gautam Gambhir 6
- Advertisement -

அனைவரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐசிசி 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வதற்காக உலகின் அனைத்து அணிகளும் இறுதிக்கட்டமாக தயாராகி வருகின்றன. அதில் 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை வென்று சரித்திரம் படைக்க தயாராகி வரும் இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, சுப்மன் கில் பேட்டிங் துறையில் சிறப்பாக செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சொல்லப்போனால் 201க்குப்பின் சதமடிக்காமல் இருந்த கதைக்கு கடந்த வருடம் முற்றுப்புள்ளி வைத்ததிலிருந்தே விராட் கோலி நல்ல ஃபார்மில் இருக்கும் நிலையில் கேப்டன் ரோகித் சர்மாவும் ஆசிய கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு நல்ல ஃபார்முக்கு திரும்பியுள்ளார். அதே போல சுப்மன் கில் இளம் கன்றாக சீறிப் பாய்ந்து வரும் நிலையில் உலக அளவில் ஜோஸ் பட்லர், டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித் போன்ற நட்சத்திர பேட்ஸ்மேன்கள் இந்த தொடரில் பெரிய ரன்களை குவித்து தங்களது அணியின் வெற்றிக்கு போராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

கம்பீர் பாராட்டு:
இந்நிலையில் இத்தொடரில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் நெருப்பாக விளையாடி பெரிய ரன்களை குவிப்பார் என்று கௌதம் கம்பீர் அதிரடியான கணிப்பை வெளியிட்டுள்ளார். குறிப்பாக விராட் கோலி, ரோஹித் சர்மா, வில்லியம்சன் போன்ற இதர நட்சத்திர பேட்ஸ்மேன்களை காட்டிலும் வித்தியாசமான தரத்தை கொண்டிருப்பதாக பாராட்டும் கம்பீர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

“இந்த உலக கோப்பையில் பாபர் அசாம் நெருப்பாக விளையாடுவார். உலக அரங்கில் நிறைய வீரர்கள் பேட்டிங் செய்வதில் நிறைய நேரத்தை கொண்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். குறிப்பாக ரோகித் சர்மா, விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஜோ ரூட் ஆகியோர் அது போன்ற தரத்தை கொண்ட வீரர்கள். ஆனால் பாபர் அசாம் சற்று வேறுபட்ட திறன் கொண்டவர்” என்று கூறினார்.

- Advertisement -

அவர் கூறுவது போல கடந்த 2019க்குப்பின் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் பாபர் அசாம் பாகிஸ்தான் அணியின் லேட்டஸ்ட் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் உலகின் இதர வீரர்களை காட்டிலும் சிறப்பாக செயல்பட்டு வருவதால் ஐசிசி தரவரிசையில் தற்போது உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாகவும் ஜொலிக்கும் அவர் அடிக்கும் போதெல்லாம் பாகிஸ்தான் எளிதான வெற்றியைப் பெற்று வருகிறது.

இதையும் படிங்க: 3 கோல்டன் டக் அவுட்டான அப்றமும் நீங்க ஏன் இதை செய்றீங்க.. ஃப்ரீயா விடுங்க – சூரியகுமாருக்கு சேவாக் முக்கிய ஆலோசனை

அதன் காரணமாக விராட் கோலியை விட சிறந்த வீரர் என்று மேத்தியூ ஹெய்டன் போன்ற நிறைய முன்னாள் வீரர்களின் பாராட்டுகளை பாபர் அசாம் பெற்று வருகிறார். அந்த சூழ்நிலையில் பொதுவாகவே பாகிஸ்தானை விமர்சிக்கக்கூடிய கௌதம் கம்பீரின் பாராட்டுகளை பெறும் அளவுக்கு பாபர் அசாம் திறமை வாய்ந்தவர் என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும் இப்போது தான் அவர் முதல் முறையாக இந்திய மண்ணில் உலகக் கோப்பையில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement