IND vs PAK : இந்திய அணிக்கு எதிரான தோல்விக்கு நாங்க பண்ண இந்த தப்பு தான் காரணம் – பாபர் அசாம் பேட்டி

azam-1
- Advertisement -

கடந்த ஆண்டு துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியின் போது இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான அணி வீழ்த்தியிருந்ததால் இம்முறை பாகிஸ்தான் அணிக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அணி இந்த ஆசிய கோப்பை தொடரில் களம் இறங்கியது. அதன்படி நேற்று நடைபெற்ற முக்கியமான லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி அசத்தலான வெற்றியை பெற்றது.

Rohit-Sharma

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியானது முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்ய பவுலர்கள் அட்டகாசமான பந்துவீச்சினை வெளிப்படுத்தி பாகிஸ்தான அணியை 147 ரன்களுக்கு சுருட்டினர். இந்திய அணி சார்பாக புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகளையும், ஹார்டிக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 19.4 அவர்களின் 5 விக்கெட்டை இழந்து 148 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியது மட்டுமின்றி பேட்டிங்கிலும் 33 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார்.

Hardik Pandya

இதன் காரணமாக ஹார்டிக் பாண்டியா ஆட்டநாயகன் விருதினையும் வென்றார். இந்நிலையில் போட்டி முடிந்து இந்த தோல்வி குறித்து பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் கூறுகையில் : நாங்கள் இந்த போட்டியில் மிகச்சிறப்பாகவே விளையாடினோம். ஆனாலும் பேட்டிங்கில் 10 முதல் 15 ரன்கள் வரை குறைவாக அடித்து விட்டதாக நினைக்கிறேன்.

- Advertisement -

அதேபோன்று எங்களது அணியில் டெய்ல் எண்டர் பவுலர்களும் கடைசி நேரத்தில் தேவையான சில ரன்களை அடிக்கும் திறனை வளர்த்து கொள்ளவேண்டும். எங்களது அணி பந்துச்சாளர்களும் மிகச்சிறப்பாகவே பந்து வீசினர். அதிலும் குறிப்பாக இந்திய பேட்ஸ்மேன்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தி கடைசி ஓவர் வரை போட்டியை கொண்டு செல்ல நினைத்தோம்.

இதையும் படிங்க : IND vs PAK : பாகிஸ்தான் அணிக்கெதிரான வெற்றிக்கு பிறகு ரோஹித் சர்மா பேசியது என்ன? – முழுவிவரம் இதோ

அதன்படி போட்டி கடைசி வரை சென்றாலும் ஹார்டிக் பாண்டியா சிறப்பாக பேட்டிங் செய்து இந்திய அணியை வெற்றி பெற வைத்துவிட்டார். நசீம் ஷா மிகச் சிறப்பாக பந்து வீசினார் அவரது பந்துவீச்சில் நல்ல வேகமும், ஆக்ரோஷமும் இருந்தது என பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement