IND vs PAK : பாகிஸ்தான் அணிக்கெதிரான வெற்றிக்கு பிறகு ரோஹித் சர்மா பேசியது என்ன? – முழுவிவரம் இதோ

Rohit-Sharma
- Advertisement -

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை லீக் போட்டியானது நடைபெற்றது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா இந்திய அணி பந்து வீசுவதாக அறிவித்தார்.

INDvsPAK

- Advertisement -

அதன்படி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்திய அணியானது 19.5 ஓவர்களில் பாகிஸ்தான அணியை 147 ரன்களுக்கு ஆல்அவுட் செய்தது. இந்திய அணி சார்பாக புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்களையும், ஹார்டிக் பாண்டியா மூன்று விக்கெட்களையும் கைப்பற்றி அசத்தினர்.

பின்னர் 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஹார்டிக் பாண்டியா இறுதிவரை ஆட்டம் இழக்காமல் 33 ரன்கள் அடித்து அணியை வெற்றி வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அதோடு ஜடேஜா மற்றும் விராட் கோலி ஆகியோர் 35 ரன்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது.

Hardik Padnday IND vs PAk

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய ரோஹித் சர்மா கூறுகையில் : இந்த சேசிங்கின் போது பாதி ஓவர்கள் கடந்த பிறகும் நாங்கள் வெற்றி பெற முடியும் என்று நம்பினோம். எப்பொழுதுமே ஒரு விடயத்தின் மீது நம்பிக்கை வைக்கும் போது நமக்கு சாதகமாக அனைத்தும் அமையும்.

- Advertisement -

இந்திய அணி கடந்த ஆண்டிலிருந்து வேகப்பந்து வீச்சில் மிகச் சிறப்பாக வளர்ந்து வந்துள்ளது. கடந்த இரு ஆண்டுகளாகவே ஏகப்பட்ட வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய அணிக்கு கிடைத்து வருகின்றனர். ஹார்டிக் பாண்டியா மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். முழுவதுமாக உடற்தகுதி பெற்று அணிக்கு திரும்பியுள்ள அவர் 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசுவதோடு அட்டகாசமாக பேட்டிங்கும் செய்கிறார்.

இதையும் படிங்க : IND vs PAK : அன்றும் இன்றும் பாகிஸ்தானை தெறிக்கவிடும் புவி – 3 புதிய ஆல் டைம் சாதனைகள், ரசிகர்கள் பாராட்டு

அதுமட்டும் இன்றி முன்பை விட தற்போதயெல்லாம் அமைதியாக இருக்கிறார். அவருடைய இந்த கம்பேக் இந்திய அணிக்கு மிகச் சிறப்பாக அமைந்துள்ளது என வெற்றி குறித்து ரோகித் சர்மா பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement