ஆசியக்கோப்பை : இந்திய அணிக்கு எதிரான போட்டி குறித்து நக்கலான பதிலை அளித்த – பாபர் அசாம்

Babar
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் செப்டம்பர் 11-ஆம் தேதி வரை ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற இருக்கிறது. இந்த ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டியில் 27-ஆம் தேதி இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. அதன்பின்பு ஆகஸ்டு 28-ஆம் தேதி மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கிரிக்கெட் உலகின் பரம எதிரணிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

- Advertisement -

ஏற்கனவே இது குறித்த தகவல் வெளியானதுமே இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ள வேளையில் இன்னும் சில வாரங்களில் இந்த போட்டியானது நடைபெற உள்ளது.

ஆசிய கோப்பை தொடர் என்பதனை தவிர்த்து எந்த ஒரு தொடராக இருந்தாலும் சரி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியின் மீது உலக ரசிகர்களின் கண் பார்வை இருக்கும் என்பதில் சிறிதளவும் சந்தேகமும் இல்லை. எப்போது இவ்விரு அணிகள் மோதி கொண்டாலும் சமூக வலைதளத்தில் அதிகம் பேசப்படும் விடயமாக அது மாறும்.

INDvsPAK

இந்நிலையில் எதிர்வரும் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிராக விளையாடும் போட்டி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பாகிஸ்தானின் கேப்டன் பாபர் அசாம் சற்று நக்கலான பதிலை அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

இந்திய அணிக்கு எதிரான போட்டியும் எங்களுக்கு மற்ற போட்டிகளைப் போல ஒரு சாதாரண போட்டி தான். எப்பொழுதும் நாங்கள் எந்த ஒரு அணிக்கு எதிராகவும் விளையாடுவது போன்று இந்திய அணிக்கு எதிராக விளையாடவுள்ள இந்த போட்டியும் சாதாரண ஒரு போட்டியாக தான் கருதி விளையாடுவோம்.

இதையும் படிங்க : சர்வதேச கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட்டால் உடைக்கக்கூடிய எம்எஸ் தோனியின் 3 முக்கிய சாதனைகளின் – லிஸ்ட் இதோ

ஆனால் அந்தப் போட்டியின் போது ஏற்படும் நெருக்கடி வித்தியாசமானது என்று பாபர் அசாம் சற்று நக்கலான பதிலை அளித்துள்ளார். அவரது இந்த பதிலுக்கு ரசிகர்கள் மத்தியில் சில விமர்சனங்களும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement