சர்வதேச கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட்டால் உடைக்கக்கூடிய எம்எஸ் தோனியின் 3 முக்கிய சாதனைகளின் – லிஸ்ட் இதோ

Pant
- Advertisement -

கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் என ஒவ்வொருவரின் பங்கும் முக்கியமானது என்ற நிலைமையில் விக்கெட் கீப்பர்களின் பங்கு மிகவும் முக்கியமாகும். ஆரம்ப காலங்களில் பீல்டிங் செய்யும் போது போட்டி முழுவதும் நின்று பந்துகளை பிடிக்க வேண்டியது மட்டுமே விக்கெட் கீப்பர்களின் முதன்மை வேலையாக இருந்தது. ஆனால் 90களின் இறுதியில் அறிமுகமான ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட் அதிரடியான பேட்டிங் செய்து விக்கெட் கீப்பர்கள் என்றால் பந்து பிடித்து போடுபவர்களாக அல்லாமல் பெரிய ரன்களையும் குவித்து வெற்றிக்கு பங்காற்ற முடியும் என்பதை நிரூபித்து விக்கெட் கீப்பர்களின் இலக்கணத்தை மாற்றினார். அந்த நடைமுறையை 2004இல் அறிமுகமான எம்எஸ் தோனி தனது அதிரடியான பேட்டிங் வாயிலாக இந்திய கிரிக்கெட்டில் அவசியமாக்கினார்.

Rishabh Pant MS Dhoni

- Advertisement -

அந்தளவுக்கு அதிரடியாக பேட்டிங் செய்து ஏராளமான ரன்களை குவித்த அவர் கடைசி நேரத்தில் களமிறங்கி வெற்றிகளைப் பெற்றுக் கொடுக்கும் பினிஷராகவும் போற்றப்படுகிறார். சொல்லப்போனால் வரலாற்றில் விளையாடிய அத்தனை இந்திய விக்கெட் கீப்பர்களை விட அதிக ரன்கள் மற்றும் சதங்களை அடித்துள்ள எம்எஸ் தோனி இந்திய விக்கெட் கீப்பர்கள் என்றால் அதிரடியாக ரன்களை எடுத்தால் மட்டும் தான் இந்தியாவுக்கு விளையாட முடியும் என்ற நிலைமையை ஏற்படுத்தி சென்றுள்ளார். அப்படிப்பட்ட மகத்தான விக்கெட் கீப்பரானா அவருக்கு பின் அவரைப் போன்ற ஒருவர் கிடைப்பாரா என்று இந்திய ரசிகர்கள் கவலையடைந்த போது விளையாட்டுத்தனமும் அதிரடியும் கலந்தவராக வந்தவர் தான் ரிஷப் பண்ட்.

தோனியை மிஞ்சும் பண்ட்:
அவரது கடைசி காலத்தில் அறிமுகமான இவர் அவரை ரோல்மாடலாக மனதில் வைத்து அவரை போலவே சிறப்பாக செயல்பட முயற்சித்து வருகிறார். ஆனால் ஆரம்ப காலத்தில் ரொம்பவே சொதப்பிய அவரை ஒரு போட்டியில் ஸ்டம்பிங் செய்ய தவறியபோது அவரது சொந்த ஊரான டெல்லி ரசிகர்களே “தோனி தோனி” என்று முழங்கி எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

Pant

இருப்பினும் அதற்காக மனம் தளராமல் தொடர்ந்து போராடி வரும் அவர் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இன்னும் தடுமாறிக் கொண்டிருந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய சவாலான வெளிநாடுகளில் சதமடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் என்ற தோனியால் முடியாத சாதனையை அசால்டாக படைத்துள்ளார். அந்த வகையில் நல்ல முன்னேற்றத்தையும் வளர்ச்சியும் கண்டுவரும் அவர் வரும் காலங்களில் உடைக்கக்கூடிய தோனியின் 3 முக்கிய சாதனைகளைப் பற்றி பார்ப்போம்:

- Advertisement -

3. அதிக டிஸ்மிஷல்ஸ்: விக்கெட் கீப்பர்களின் அடிப்படை வேலையான ஸ்டம்பிங், கேட்ச் பிடிப்பது போன்ற அம்சங்களில் 829 விக்கெட்டுகளை எடுத்துள்ள எம்எஸ் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் அதிக டிஸ்மிஷல்ஸ் செய்த இந்திய விக்கெட் கீப்பராகவும் உலக அளவில் மார்க் பவுச்சர், ஆடம் கில்கிறிஸ்ட் ஆகியோருக்குப் பின் 3-வது இடத்திலும் உள்ளார்.

Pant

அந்த வகையில் ஆரம்ப காலங்களில் இந்த அம்சங்களில் ரொம்பவே தடுமாறிய ரிஷப் பண்ட் சமீப காலங்களில் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறார். இதுவரை 147 டிஸ்மிசல்ஸ் செய்துள்ள அவர் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு போட்டியிலும் ஒரு இன்னிங்சிலும் தோனியின் இந்த சாதனையை முறியடியத்துள்ளார். மேலும் தோனியின் காலத்திலிருந்த வேகப்பந்து வீச்சு கூட்டணியை விட இப்போதைய இந்திய வேகப்பந்து வீச்சு கூட்டணி அபாரமாக உள்ள காரணத்தாலும் ரிஷப் பண்ட் 25 வயது மட்டுமே நிரம்பியவர் என்ற காரணத்தாலும் இந்த சாதனையை நிச்சயமாக அவர் முறியடிப்பார் என்று நம்பலாம்.

- Advertisement -

2. அதிகபட்ச ஸ்கோர்: அதிரடியாக பேட்டிங் செய்யும் திறமைக்கு எடுத்துக்காட்டாக கடந்த 2013இல் தமக்கு மிகவும் பிடித்த சென்னை மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் 224 ரன்களை விளாசிய எம்எஸ் தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதம் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் மற்றும் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய விக்கெட் கீப்பராக சாதனை படைத்துள்ளார்.

pant 1

தற்போது 31 போட்டிகளிலேயே 5 சதங்கள் அடித்துள்ள ரிஷப் பண்ட் அதில் 4 சதங்களை வெளிநாட்டு மண்ணில் அடித்துள்ளார். அந்த வகையில் உலகின் அனைத்து இடங்களிலும் பெரிய ரன்களை அடிக்கும் திறமை பெற்றுள்ள இவர் ஏற்கனவே அதிகபட்ச ஸ்கோராக 159 ரன்களை பதிவு செய்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியை விட அதிரடி காட்டும் திறமை பெற்றுள்ள இவர் வரும் காலங்களில் நிச்சயமாக இரட்டை சதமடித்து 224 ரன்களை தாண்டுவதற்கு பிரகாசமான வாய்ப்புள்ளது.

- Advertisement -

1. அதிக சிக்ஸர்கள்: வரலாற்றில் அதிக சிக்சர்கள் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் ரோகித் சர்மா, சச்சின் டெண்டுல்கர் போன்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுடன் 359 சிக்ஸர்களுடன் மிடில் ஆர்டரில் விளையாடும் தோனியின் பெயர் எப்போதுமே இருக்கும். அதனாலேயே சிக்ஸர் அடிப்பதில் இந்தியாவின் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக தோனியை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.

இதையும் படிங்க : ஆசிய கோப்பை : 37 வயதாகிவிட்டதால் இதுதான் கடைசி சான்ஸ், தினேஷ் கார்த்திக்-க்கு பாக் வீரர் விடுத்த வேண்டுகோள்

அந்த நிலைமையில் அவரை விட சற்று மேல் வரிசையில் பேட்டிங் செய்யும் ரிஷப் பண்ட் அவரைப்போலவே சிக்ஸர் அடிக்கும் திறமையை பெற்று இதுவரை 109 சிக்ஸர்களை அடித்துள்ளதால் நிச்சயம் வரும் காலங்களில் இந்த சாதனையையும் தூளாக்குவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

Advertisement