இப்படி விளையாடுனா நம்மல யாரும் ஸ்டார்ஸ்ன்னு சொல்ல மாட்டாங்க. சக வீரர்களை விளாசிய – பாபர் அசாம்

Babar-Azam
Advertisement

ஆறு அணிகள் பங்கேற்று விளையாடி வந்த 2023-ஆம் ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் விளையாட இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ள வேளையில் பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணி இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளது அனைவரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அதோடு இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற முக்கிய ஆட்டத்தில் 42 ஓவர்கள் மட்டுமே போட்டி நடைபெறும் என்று கூறப்பட்ட வேளையில் பாகிஸ்தான் அணி இலங்கை அணியை நிச்சயம் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 42 ஓவர்களில் 252 ரன்கள் மட்டுமே குவிக்க இலங்கை அணி அதனை வெற்றிகரமாக துரத்தி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கான வாய்ப்பினை உறுதி செய்தது.

- Advertisement -

குறிப்பாக இலங்கை அணிக்கு எதிரான இந்த முக்கிய போட்டியில் பாகிஸ்தான அணியின் பேட்டிங் ஓரளவு சிறப்பாக இருந்தாலும், பந்துவீச்சில் சிறப்பாக செயல்படவில்லை என்பதே உண்மை. ஏனெனில் துவக்கத்திலேயே இலங்கை அணியின் இரண்டு வீரர்களை வீழ்த்திய பாகிஸ்தான் அணி அதன் பிறகு மிடில் ஆர்டரில் அவர்களை சீரான இடைவெளியில் வீழ்த்த முடியாமல் தவித்தது.

இதன் காரணமாக தற்போது பாகிஸ்தான் அணியின் மீது விமர்சனங்களும் எழுந்துள்ளன. இந்நிலையில் பாகிஸ்தான அணியின் கேப்டன் பாபர் அசாம் இலங்கை அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு சக பாகிஸ்தான் வீரர்களை ஓய்வறையில் வைத்து கடிந்ததாக தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

அந்த வகையில் இலங்கை அணிக்கு எதிரான தோல்விக்கு பின்னர் அதிருப்தி அடைந்த பாபர் அசாம் ஓய்வறைக்கு சென்று சக வீரர்களிடம் : “இதே போன்று நாம் விளையாடினால் அது அணிக்கு நல்லதல்ல”, “உலக கோப்பை இன்னும் சிறிது நாட்களில் துவங்க இருக்கிறது நாம் இதேபோன்று மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் யாரும் நம்மை ஸ்டார்ஸ் என்று அழைக்க மாட்டார்கள்”.

இதையும் படிங்க : முடிவுக்கு வந்த ரோஹித்தின் வெற்றிநடை.. வங்கதேசத்துக்கு எதிராக மோசமான சாதனை – 2007 உ.கோ பின் இந்தியா பரிதாப தோல்வி

இலங்கை அணிக்கு எதிரான இந்த போட்டியில் நமது அணி வீரர்களிடம் ஒற்றுமை இல்லை. அதனைப் பார்க்கவே எனக்கு ஏமாற்றமாக உள்ளது என சக வீரர்களை அவர் கடிந்ததாக கூறப்படுகிறது. தற்போதைய ஒருநாள் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த பந்துவீச்சு யூனிட்டாக பார்க்கப்படும் பாகிஸ்தான் அணி பேட்டிங்கிலும் சரியான அளவு பலத்தினை பெற்றுள்ளது. இவ்வேளையில் அவர்கள் பெற்ற இந்த தோல்வி அந்த அணிக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement