பாபர் அசாமை எல்லாரும் திட்றது தப்பே இல்ல. தவறான முடிவை எடுத்து – அவரே அவங்க டீமுக்கு ஆப்பு வச்சிட்டாரு

Babar-Azam
Advertisement

இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 26-ஆவது லீக் போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அக்டோபர் 27-ஆம் தேதியான இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்த தொடரில் ஏற்கனவே தென்னாபிரிக்க அணி வலுவான நிலையில் இருக்கும் வேளையில் பாகிஸ்தான அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்த போட்டியில் பங்கேற்று விளையாடி வருகிறது.

அந்த வகையில் இன்றைய போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தங்களது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். அதனைத் தொடர்ந்து முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணியானது 46.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 270 ரன்கள் மட்டுமே குவித்தது.

- Advertisement -

பாகிஸ்தான் அணி சார்பாக பாபர் அசாம் 50 ரன்களையும், சவுத் ஷாகில் 52 ரன்களையும் குவித்தனர். பின்னர் 271 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா அணியானது விளையாடி வறுகிறது. தற்போது வரை 25 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்துள்ள தென்னாப்பிரிக்க அணி 154 ரன்கள் அடித்துள்ளது.

அதன் காரணமாக தென்னாப்பிரிக்க அணியானது இன்னும் மீதமுள்ள 25 ஓவர்களில் 117 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நல்ல நிலையில் இருக்கிறது. கைவசம் ஆறு விக்கெட் எஞ்சி இருப்பதினால் தென்னாபிரிக்க அணி தற்போது வெற்றியை நோக்கி பயணித்து வருகிறது என்று கூறலாம். இந்நிலையில் இந்த போட்டியின் போது பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் எடுத்த ஒரு தவறான முடிவு தான் அந்த அணி இந்த போட்டியில் பின்னடைவை சந்திக்க ஒரு காரணமாக அமைந்துள்ளது என்று பலரும் குறிப்பிட்டு வருகின்றனர்.

- Advertisement -

அந்தவகையில் சென்னை மைதானத்தை பொருத்தவரை டாஸ் வென்ற கேப்டன்கள் எப்போதுமே சேசிங் செய்வதாக தான் முடிவு எடுத்து வந்தார்கள். ஏனெனில் சேப்பாக்கம் மைதானம் எப்போதுமே இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணிகளுக்கு தான் சாதகமாக இருந்து வருகிறது. இந்த உலகக் கோப்பை தொடரிலும் இதுவரை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டிகளில் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணியே வெற்றி பெற்று வந்துள்ள வேளையில் பாபர் அசாம் எதற்காக திடீரென டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார் என்று புரியவில்லை.

இதையும் படிங்க : களத்திற்கு வந்த 2 ஆவது பந்திலேயே முட்டிக்கொண்ட பாக்-தெ.ஆ வீரர்கள் – மைதானத்தில் நடந்தது என்ன?

ஏனெனில் ஏற்கனவே பாகிஸ்தான் அணி 300-ரன்களுக்கு மேற்பட்ட ரன்களை அடித்தும் அவர்களது பவுலர்களால் கட்டுப்படுத்த முடியாமல் போன வேளையில் இப்படி மீண்டும் முதலில் பேட்டிங் செய்தது ஏன்? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேபோன்று சேசிங்கிற்கு சாதகமான இந்த சேப்பாக்கம் மைதானத்தில் முறையான சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லாமல் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த தவறு என்றும் ரசிகர்கள் பாபர் அசாம் செய்த தவறை சுட்டிக்காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement