ஐசிசி உலக கோப்பை 2023 : இந்திய மண்ணில் 1992 போல வரலாறு படைக்குமா.. பாகிஸ்தான் அணியின் முழுமையான அலசல்

Pakistan team
- Advertisement -

ஐசிசி நடத்தும் 2023 உலக கோப்பையை வெல்வதற்கு சொந்த மண்ணில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தயாராக இருக்கிறது. அதற்கு சவாலை கொடுக்க வரும் எஞ்சிய 9 அணிகளில் அண்டை நாடான பாகிஸ்தான் மட்டும் 2 லட்சியத்துடன் வருகிறது என்றே சொல்லலாம். முதலில் 1992இல் இம்ரான் கான் தலைமையில் உலகக் கோப்பையை வென்றது போல் இம்முறை பாபர் அசாம் தலைமையில் சரித்திரம் படைக்க வேண்டும் என்பது அந்த அணியின் கனவாகும்.

அதற்கு முன்பாக கடந்த 30 வருடங்களாக சந்தித்த 7 போட்டிகளிலும் சந்தித்த தொடர் தோல்விகளுக்கு அக்டோபர் 14ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் பரம எதிரி இந்தியாவை அதன் சொந்த மண்ணில் முதல் முறையாக உலகக் கோப்பையில் தோற்கடித்து மோசமான சரித்திரத்தை மாற்ற வேண்டும் என்பது பாகிஸ்தானின் மற்றுமொரு கனவாகும். இருப்பினும் அதை சாதிப்பதற்கு அந்த அணியின் பேட்டிங்கில் கேப்டன் பாபர் அசாம், முகமத் ரிஸ்வான் மட்டுமே மிகப்பெரிய நம்பிக்கையாக இருக்கிறார்கள்.

- Advertisement -

பாகிஸ்தான் அணி:
சொல்லப்போனால் நடந்த தொடர் வரை ஓப்பனிங் ஜோடியாக இருந்த அவர்கள் பேட்டிங் பிரச்சினை தீர்ப்பதற்காக தற்போது டாப் மற்றும் மிடில் ஆர்டரில் பிரிந்து விளையாடுகின்றனர். ஆனாலும் பெரும்பாலான முக்கிய போட்டிகளில் அவர்களை தவிர்த்து இமாம்-உல்-ஹக், அப்துல்லா சபிக், இப்திகார் அகமது, சல்மான் ஆகா, சௌத் ஷாக்கீல் போன்ற பேட்ஸ்மேன்கள் பெரிய இன்னிங்ஸ் விளையாடி வெற்றியை பெற்றுக் கொடுக்கத் தடுமாறுகின்றனர்

இதில் 2017 சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் பெற்றுக் கொடுத்த பகார் ஜமான் தற்போது மோசமான பார்மில் இருப்பது அந்த அணியின் மற்றொரு கவலையாகும். அத்துடன் இமாம், சௌத் ஷாக்கீல், சல்மான் ஆஹா போன்றவர்கள் தொடர்ந்து பெரிய ரன்கள் அடிக்க தவறும் நிலையில் இஸ்திகார் அகமது ஃபினிஷிங் செய்யும் வேலையை தொடர்ந்து சிறப்பாக செய்வதில்லை. அதே போல துணை கேப்டன் மற்றும் முதன்மை சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டர் சடாப் கான் 2023 ஆசிய கோப்பை ஒரு விக்கெட் கூட எடுக்காமல் மோசமாக செயல்பட்டார்.

- Advertisement -

அது போக உஷாமா மிர், முகமத் நவாஸ் போன்ற இதர ஸ்பின்னர்களும் உலகத்தரம் வாய்ந்தவர்களாக இருப்பதில்லை. அத்துடன் ஹர்திக் பாண்டியா, கேமரூன் கிரீன், மார்ஷ் போன்ற வீரர்களைப் போல் பாகிஸ்தான் அணியில் தரமான வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் இல்லை பாகிஸ்தான் அணியின் மிகப்பெரிய குறையாகும். மேலும் நாசீம் ஷா ஆசிய கோப்பையில் காயத்தை சந்தித்து வெளியேறியது மற்றுமொரு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

அந்த சூழ்நிலையில் ஷாஹீன் அப்ரிடி, ஹரிஷ் ரவூப் ஆகிய உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பது பாகிஸ்தானின் ஆறுதலான மிகப்பெரிய பலமாகும். அதே சமயம் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாட்டு வீரர்களைப் போல் அல்லாமல் கடந்த 10 வருடங்களாக மேற்குறிப்பிட்ட வீரர்கள் யாரும் இந்திய மண்ணில் எல்லை பிரச்சினைகளால் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை.

இதையும் படிங்க: இவங்க கூடவா தோத்தீங்க.. 35 ரன்கள் 6 விக்கெட்கள்.. வங்கதேசத்தை சுருட்டி வீசி.. இந்தியாவுக்கு சாம்பிள் காட்டிய நியூஸிலாந்து வீரர்

எனவே அந்த அனுபவமில்லாதது இந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு பின்னடைவாக அமையலாம். ஆனாலும் கணிக்க முடியாத அணி என்று வல்லுனர்களால் போற்றப்படும் பாகிஸ்தான் 1992 போல சற்று அதிர்ஷ்டத்தின் உதவியிருந்தால் இருக்கும் வீரர்களை வைத்து இந்தியா உட்பட உலகின் அனைத்து அணிகளுக்கும் சவாலை கொடுத்து 2023 சாம்பியன் பட்டம் வெல்வதற்கு தகுதியற்ற அணி என்று சொல்லி குறைத்து மதிப்பிட முடியாது என்பதே க்ரிக்தமிழ் இணையத்தின் அலசலாகும்.

Advertisement