இவங்க கூடவா தோத்தீங்க.. 39 ரன்கள் 6 விக்கெட்கள்.. வங்கதேசத்தை சுருட்டி வீசி.. இந்தியாவுக்கு சாம்பிள் காட்டிய நியூஸிலாந்து வீரர்

Ish Sodhi
- Advertisement -

இந்தியாவில் நடைபெறும் ஐசிசி 2023 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அதில் கத்துக்குட்டியாக பார்க்கப்படும் வங்கதேசத்துக்கு எதிராக கேன் வில்லியம்சன் போன்ற முதன்மை வீரர்கள் இல்லாமல் களமிறங்கியுள்ள நியூசிலாந்து அணியை லாக்கி பெர்குசன் கேப்டனாக தலைமை தாங்கி வருகிறார். அந்த நிலையில் இத்தொடரின் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலைமையில் 2வது போட்டி செப்டம்பர் 23ஆம் தேதி டாக்காவில் நடைபெற்றது.

அதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த போதிலும் சற்று தடுமாறு ஆட்டத்தை வெளிப்படுத்தி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 49.2 ஓவர்களில் 254 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு ஃபில் ஆலன் 12, வில் எங் 0, பௌஸ் 14 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 36/3 என சரிவை சந்தித்தாலும் மிடில் ஆர்டரில் அந்த அணிக்கு ஹென்றி நிக்கோலஸ் 49, டாம் ப்ளண்டல் 68 ரன்கள் அடித்து மீட்டெடுத்தனர்.

- Advertisement -

இந்தியாவுக்கு சாம்பிள்:
அதே போல லோயர் மிடில் ஆர்டரில் மெக்கொன்சி 20, கெய்ல் ஜமிசன் 20, இஷ் சோதி 35 ரன்கள் குவித்து நியூசிலாந்தின் வலுப்படுத்திய நிலையில் வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக மெகிதி ஹசன், கலீட் அஹ்மத் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதை தொடர்ந்து 255 ரன்களை துரத்திய வங்கதேசத்திற்கு கேப்டன் லிட்டன் தாஸ் ஆரம்பத்திலேயே 6 ரன்னில் அவுட்டாகி பெரிய ஏமாற்றத்தை கொடுத்தார்.  அதைத்தொடர்ந்து வந்த ஹசனை 16 ரன்களில் தம்முடைய சிறப்பான சுழல் பந்து வீச்சால் காலி செய்த இஷ் சோதி அனுபவ சீனியர் வீரர் சௌமியா சர்க்காரையும் டக் அவுட்டாக்கி ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

அதோடு நிற்காமல் அடுத்த சில ஓவர்களில் நல்ல ஃபார்மில் இருக்கும் தவ்ஹீத் ஹ்ரிடாயை 4 ரன்களில் கிளீன் போல்ட்டாக்கிய அவர் மறுபுறம் 42 ரன்கள் குவித்து சவாலை கொடுத்த நட்சத்திர வீரர் தமீம் இக்பாலையும் அவுட்டாக்கினார். மேலும் மேஜிக் செய்யக்கூடிய மெஹதி ஹசனையும் 17 ரன்களில் அடக்கிய அவர் வங்கதேச பேட்டிங்கை மொத்தமாக சாய்த்தார். அதனால் சீரான இடைவெளிகளில் அனைத்து விக்கெட்களையும் இழந்த வங்கதேசம் 41.1வரில் 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

- Advertisement -

அந்தளவுக்கு பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு 86 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து 1 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலை பெற்று கோப்பையை வெல்லும் வாய்ப்பை அதிகரித்துள்ளது. இந்த வெற்றிக்கு பேட்டிங்கில் 35 (39) ரன்களை கடைசி நேரத்தில் வந்து எடுத்த இஷ் சோதி பந்து வீச்சில் 10 ஓவரில் 1 மெய்டன் உட்பட 39 ரன்கள் மட்டும் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது வென்றார்.

இதையும் படிங்க: இந்திய அணியை விட அதிக பிராக்டீஸ் எடுக்குறது அங்கதான். அதுதான் என்னோட சக்சஸ்க்கும் காரணம் – முகமது ஷமி பேட்டி

குறிப்பாக இந்த வங்கதேசத்திடமா 2023 ஆசிய கோப்பையில் கடந்த வாரம் தோற்றீர்கள் என்று இந்தியாவை கேட்கும் அளவுக்கு ஒற்றை ஆளாக அவருடைய செயல்பாடுகள் சிறப்பாக இருந்தது. அத்துடன் வில்லியம்சன் போன்ற முதன்மை வீரர்கள் இல்லாமலேயே வெற்றி கண்டுள்ள தாங்கள் உலகக்கோப்பையில் உங்களை சந்திப்பதற்கு தயாராக இருக்கிறோம் என்ற முன்னோட்டத்தையும் இந்தியாவுக்கு இப்போட்டியில் நியூஸிலாந்து காண்பித்ததுள்ளது என்றால் மிகையாகாது.

Advertisement