இந்திய அணியை விட அதிக பிராக்டீஸ் எடுக்குறது அங்கதான். அதுதான் என்னோட சக்சஸ்க்கும் காரணம் – முகமது ஷமி பேட்டி

Shami
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற மிக முக்கியமான காரணமாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி திகழ்ந்தார். ஏனெனில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இந்த முதல் போட்டியில் 10 ஓவர்கள் வீசிய அவர் 51 ரன்களை விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இதன் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. மேலும் அந்த ஒரு சிறப்பான பந்துவீச்சின் மூலம் அவர் பல்வேறு சாதனைகளை பதிவு செய்தார். அந்த வகையில் 19 ஆண்டுகள் கழித்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 விக்கெட் வீழ்த்திய மூன்றாவது பவுலர் என்ற சாதனையை படைத்தார்.

- Advertisement -

அதோடு கடந்த 2007-ஆம் ஆண்டிற்கு பிறகு சொந்த மண்ணில் 5 விக்கெட்டை கைப்பற்றிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். ஆனாலும் அவர் இந்திய அணி மூன்றாவது பவுலராகவே முகமது ஷமி பார்க்கப்படுகிறார்.

ஏனெனில் தற்போதைய இந்திய அணியில் பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகிய இருவர் மட்டுமே முதன்மை வேகப்பந்து வீச்சாளர்களாக பார்க்கப்பட்டு வருகின்றனர். அதோடு அவ்வப்போது மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக மட்டுமே ஷமி செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் இப்படி தான் அவ்வப்போது விளையாடுவது ஏன்? என்பது குறித்து பேசிய ஷமி கூறுகையில் :

- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு பிறகு எனக்கு சிறிது ஓய்வு தேவைப்பட்டது. ஏனெனில் இடைவிடாது அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடுவதால் எனது உடலுக்கு கொஞ்சம் ஓய்வு தேவை என்று நினைத்தேன். ஆனாலும் ஓய்வில் இருக்கும் போதும் சரி, இந்திய அணியில் இருக்கும் போதும் சரி அங்கு இருப்பதை விட எனது வீட்டில் தான் அதிகமாக பயிற்சி எடுத்து வருகிறேன்.

இதையும் படிங்க : IND vs AUS : 2 ஆவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

அதோடு அணி நிர்வாகம் மற்றும் பயிற்சியாளர், கேப்டன் என அனைவரும் என்னை எந்த நேரத்தில் பயன்படுத்த விரும்புகிறார்களோ அந்த நேரத்தில் நான் தயாராக இருக்க வேண்டும். இதன் காரணமாகவே தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். அதேபோன்று மூன்றாவது பவுலராக இருப்பது குறித்து எனக்கு எந்த ஒரு கவலையும் இல்லை. எனது அணிக்கு என்னுடைய பங்களிப்பை வழங்க வேண்டும் என்பது மட்டுமே எண்ணமாக உள்ளது என முகமது ஷமி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement