IND vs AUS : 2 ஆவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

IND-vs-AUS
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த தொடரில் நடைபெற்று முடிந்த முதலாவது ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்திய இந்திய அணியானது இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது செப்டம்பர் 24-ஆம் தேதி நாளை இந்தூர் நகரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்க காத்திருக்கிறது.

- Advertisement -

அதேவேளையில் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை சமன் செய்யலாம் என்கிற முனைப்புடனும் ஆஸ்திரேலியா அணியும் களமிறங்க இருப்பதினால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. அதேபோன்று இந்த இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்கள் இடம் பிடிப்பார்கள் என்பது குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

அந்த வகையில் நாளைய இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம். அதன்படி ஏற்கனவே முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுவிட்டதால் இரண்டாவது போட்டியில் எந்தவித மாற்றத்தையும் நிகழ்த்தாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஏனெனில் இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் பட்சத்தில் மூன்றாவது போட்டியில் பெஞ்சில் இருக்கும் வீரர்களுக்கு வாய்ப்பினை எளிதாக வழங்கலாம். எனவே நாளைய போட்டிக்கான இந்திய அணியில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது. அதன்படி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : அடேங்கப்பா ரன்னருக்கே இத்தனை கோடியா.. ஐபிஎல் தொடரை ஓரம்கட்டி ஐசிசி வெளியிட்ட .. 2023 உ.கோ பரிசுத் தொகை பட்டியல் இதோ

1) ருதுராஜ் கெய்க்வாட், 2) சுப்மன் கில், 3) ஷ்ரேயாஸ் ஐயர், 4) கே.எல் ராகுல், 5) இஷான் கிஷன், 6) சூரியகுமார் யாதவ், 7) ரவீந்திர ஜடேஜா, 8) ரவிச்சந்திரன் அஷ்வின், 9) ஷர்துல் தாகூர், 10) முகமது ஷமி, 11) பும்ரா.

Advertisement