பாபர் அசாம் பற்றி முதல் முறையாக பேசிய விராட் கோலி – வெளிப்படையாக பாராட்டி என்ன சொன்னர்னு பாருங்க

Babar-Azam-and-Virat-Kohli
- Advertisement -

ஐக்கிய அரபு நாடுகளில் கோலாகலமாக துவங்கியுள்ள ஆசிய கோப்பை 2022 தொடரில் ஆகஸ்ட் 28ஆம் தேதியன்று குரூப் பி பிரிவில் இடம் பிடித்துள்ள பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் போட்டிக்கு அதிகப்படியான எதிர்பார்ப்புகள் நிலவுகிறது. குறிப்பாக கடைசியாக இதே துபாயில் இவ்விரு அணிகளும் மோதிய போது உலக கோப்பையில் முதல் முறையாக தங்களை தோற்கடித்த பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. அதை விட இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி பழைய ஃபார்முக்கு திரும்பி தன் மீதான விமர்சனங்களை உடைப்பாரா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

Virat Kohli IND vs PAK

- Advertisement -

ஏனெனில் 33 வயதிலேயே தனது அபார திறமையால் 23000க்கும் மேற்பட்ட ரன்களையும் 70 சதங்களையும் விளாசி ஏராளமான வெற்றிகளை பெற்று கொடுத்துள்ள அவரை 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக பெரிய பெயரை வைத்துக்கொண்டு எத்தனை நாட்கள் விளையாடுவீர்கள் என நிறைய முன்னாள் வீரர்கள் அணியிலிருந்து நீக்குமாறு விமர்சித்துள்ளார்கள். இருப்பினும் இந்த வயதிலேயே இவ்வளவு பெரிய சாதனைகளைப் படைத்த அவரது அருமையை உணர்ந்த ரிக்கி பாண்டிங், பிரைன் லாரா போன்ற நிறைய வெளிநாட்டவர்கள் விமர்சனத்தை மிஞ்சும் ஆதரவை கொடுத்து வருகின்றனர்.

பாபரின் ஆதரவு:
ஆனால் தற்சமயம் விளையாடும் வீரர்களிடையே அவருக்கு ஆதரவு கொடுத்தவர்களில் பாகிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திரம் மற்றும் கேப்டன் பாபர் அசாம் மிகவும் முக்கியமானவர் என்றே கூறலாம். ஏனெனில் விராட் கோலி பார்மை இழந்த 2019க்குப்பின் 3 வகையான கிரிக்கெட்டிலும் மிகச் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி ரன் மெஷினாக ரன்களை குவித்து பாகிஸ்தானுக்கு நிறைய வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து வரும் அவர் சில தருணங்களில் விராட் கோலியையே மிஞ்சும் அளவுக்கு சாதனை படைத்து வருகிறார். அத்துடன் ஐசிசி தரவரிசையில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவரை பின்னுக்கு தள்ளியுள்ள பாபர் அசாம் தற்சமயத்தில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக ஜொலிக்கிறார்.

INDvsPAK

அதனால் நிறைய பாகிஸ்தான் முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் விராட் கோலியை விட பாபர் அசாம் தான் சிறந்தவர் என்று வெளிப்படையாகவே பேசத் துவங்கியுள்ளனர். அப்படிப்பட்ட நிலையில் கடுமையான விமர்சனத்தில் தவிக்கும் விராட் கோலியின் வலியை புரிந்து கொண்ட அவர் “இதுவும் கடந்து போகும் உறுதியோடு இருங்கள்” என்று கடந்த மாதம் ட்வீட் போட்டு ஆதரவு கொடுத்தது இந்த உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. அதற்கு நன்றி தெரிவித்து பதிலளித்த விராட் கோலி தற்போது முதல் முறையாக அவரைப் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

- Advertisement -

சிறந்த பேட்ஸ்மேன்:
தமக்கு போட்டியானவர் என்பதையும் தாண்டி நல்ல மனிதர் என்ற பாராட்டிள்ள விராட் கோலி தற்சமயத்தில் பாபர் அசாம் 3 வகையான கிரிக்கெட்டிலும் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக திகழ்வதாகவும் வெளிப்படையாக கூறியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “சந்தித்த முதல் நாளிலிருந்தே அவரிடம் மதிப்பையும் மரியாதையையும் பார்த்து வருகிறேன். தற்சமயத்தில் 3 வகையான கிரிக்கெட்டிலும் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக மாறிய பின்பும் அவருடைய அந்த பண்பு மாறவில்லை”

Rizwan

“தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் அபாரமான திறமையையும் கொண்டுள்ளார். அவர் விளையாடுவதை எப்போதும் நான் மகிழ்ச்சியுடன் பார்த்து வருகிறேன். அவருடைய நடவடிக்கைகள் இப்போதும் மாறவில்லை. ஏனெனில் தற்போது மிகச் சிறப்பாக செயல்படும் அவர் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்தி வருகிறார். என்னை நோக்கி அவரது அணுகுமுறை இப்போது மாறுவதை நான் காணவில்லை. இது அவருடைய பெரிய கேரியருக்கான வளர்ச்சியில் நல்ல அடித்தளம் அமைந்துள்ளதற்கான அறிகுறியாகும்”

- Advertisement -

“2019 உலக கோப்பையில் மான்செஸ்டரில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு பின்பு தான் முதல் முறையாக அவருடன் நான் பேசினேன். அண்டர்-19 அளவிலிருந்தே எனக்கு தெரிந்த இமாத் வசிம் பாபர் அசாம் என்னுடன் பேச விரும்புவதாக தெரிவித்தார். அந்த வகையில் முதல் முறையாக நாங்கள் ஒன்றாக அமர்ந்து கிரிக்கெட்டைப் பற்றி மனம் விட்டு பேசினோம்”

இதையும் படிங்க : கொரோனாவில் இருந்து மீண்ட ராகுல் டிராவிட். எப்போது அணியுடன் இணைகிறார் தெரியுமா? – வெளியான அறிவிப்பு

“அவரை போன்ற வீரர்கள் மிகவும் நீண்ட தூரம் பயணித்து இளம் வீரர்களுக்கு உத்வேகத்தை கொடுக்கக் கூடியவர்கள். அதை அவரிடமும் பார்க்கிறேன். தற்போது விளையாடி வருவதற்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்த நான் அவர் எவ்வாறு சிறப்பாக விளையாடுகிறார் என்பதையும் கூறியுள்ளேன். அவருக்கு மீண்டும் என்னுடைய வாழ்த்துக்கள், இந்த அனைத்துக்கும் அவர் தகுதியானவர். சொல்லப்போனால் உலக கிரிக்கெட்டுக்கு அவரைப் போன்ற நிறைய வீரர்கள் தேவை” என்று மனதார பாராட்டினார்.

Advertisement