நேபாளத்தை வீழ்த்திய கையோடு இந்திய அணிக்கு சவால் விடுத்த பாபர் அசாம் – அனல் பறக்கப்போகும் அடுத்த போட்டி

Babar-Azam
- Advertisement -

ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது நேற்று பாகிஸ்தான் நாட்டின் முல்தான் நகரில் துவங்கியது. இந்த தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாள் அணிகள் மோதின. பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணி இந்த போட்டியில் எளிதாக நேபாள அணியை வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது போலவே நேற்று பாகிஸ்தான் அணியானது 238 ரன்கள் வித்தியாசத்தில் நேபாள் அணியை வீழ்த்தி அசத்தியது.

அதன்படி நேற்று முல்தான் நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் விளையாடிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 342 ரன்களை குவித்தது. பாகிஸ்தான் அணி சார்பாக அதிகபட்சமாக பாபர் அசாம் 151 ரன்களையும், இப்திகார் அகமது 109 ரன்களையும் அடித்தனர்.

- Advertisement -

பின்னர் 343 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நேபாள் அணியானது பாகிஸ்தான் அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 23.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 104 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணி 238 ரன்கள் ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் கூறுகையில் : இந்த போட்டியில் நான் பேட்டிங் செய்ய சென்றபோது பந்து சரியாக பேட்டுக்கு வரவில்லை. ஆனால் அதன் பிறகு ரிஸ்வான் உடன் இணைந்து ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டும் என்று நினைத்தேன்.

- Advertisement -

அந்த வகையில் நானும் அவரும் மிகச் சிறப்பாக விளையாடினோம். ரிஸ்வான் சிறப்பாக விளையாடியது எனக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்தது. பின்னர் அவர் ஆட்டம் இழந்து வெளியேறியதும் இப்திகார் அகமது சிறப்பாக விளையாடினார். அவர் உள்ளே வரும்போது நான் உங்களுடைய இயற்கையான ஆட்டத்தை விளையாடுங்கள் என்று கூறினேன். அவரும் ஒரு இரண்டு மூன்று பவுண்டரிகளுக்கு பிறகு மிகவும் கச்சிதமாக விளையாடினார்.

இதையும் படிங்க : PAK vs NEP : கோலிக்கு அடுத்து நான் தான்டா.. முதல் போட்டியிலேயே மாஸ் சம்பவம் செய்த – பாபர் அசாம்

அதேபோன்று இன்றைய போட்டியில் எங்களது வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் என அனைவருமே மிகச் சிறப்பாக பந்து வீசினர். இந்த வெற்றி எங்களுக்கு ஒரு நல்ல நம்பிக்கையை கொடுத்து இருக்கிறது. அடுத்து வரும் இந்தியா பாகிஸ்தான் போட்டி மிகப் பெரிய எதிர்பார்ப்பு எட்டியுள்ளது. நிச்சயம் அந்த போட்டியிலும் நாங்கள் எங்களுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்போம் என பாபர் அசாம் இந்திய அணிக்கு சவால் விடும் வகையில் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement