ஒரிஜினல் ஃபார்முக்கு வந்த பாபர் அசாம்? மீண்டும் சொதப்பியதால் கிங் கோலியுடன் ஒப்பிட்ட ஆஸி ஏமாற்றம்

Babar Azam
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் 2025/26 பிக்பேஷ் டி20 பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் பாகிஸ்தானை சேர்ந்த முகமது ரிஸ்வான், பாபர் அசாம், சாகின் அப்ரிடி ஆகியோர் வெவ்வேறு விளையாடுகிறார்கள். ஆனால் அந்த மூவரில் யாருமே தங்களுடைய முதல் போட்டியில் சிறப்பாக விளையாடவில்லை.

குறிப்பாக ஒரு காலத்தில் விராட் கோலியை விட பாபர் அசாம் சிறந்த பேட்ஸ்மேன் என்று பாகிஸ்தானை சேர்ந்த முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் தலையில் வைத்து கொண்டாடினர். அதற்குப் பரிசாக 2022, 2024 டி20 உலகக் கோப்பையில் அவருடைய தலைமையில் ஜிம்பாபே மற்றும் அமெரிக்கா போன்ற கத்துக்குட்டிகளிடம் பாகிஸ்தான் அவமானத் தோல்வியை சந்தித்தது. மேலும் 2023 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணியிடம் பாகிஸ்தான் முதல் முறையாக சந்தித்தது.

- Advertisement -

சொதப்பிய பாபர்:

அந்த தோல்விகளுக்கு பேட்டிங்கில் சுமாராக விளையாடிய பாபர் அசாம் முக்கிய காரணமாக அமைந்தார். அதனால் கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்த அவர் சாதாரண பேட்ஸ்மேனாக விளையாடியும் 2023க்குப்பின் இரண்டரை வருடங்கள் சதமடிக்க முடியாமல் தடுமாறினார். அதனால் தயவு செய்து இவரை விராட் கோலியுடன் ஒப்பிடாதீர்கள் என்று சோயப் அக்தர், முகமது ஹபீஸ் போன்ற முன்னாள் பாகிஸ்தான் வீரர்களே விமர்சித்தார்கள்.

ஒருவழியாக கடந்த மாதம் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் பாபர் அசாம் சதமடித்தார். உடனே ஃபார்முக்கு திரும்பிய பாபர் அசாம் பிக்பேஷ் தொடரில் சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்காக அடித்து நொறுக்குவார் பாருங்கள் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்தனர். அதே போல ஆஸ்திரேலிய ஊடகங்களும் கிங் பாபர் அசாம் பிக்பேஷ் தொடருக்கு பெருமை சேர்க்க வந்துள்ளதாக புகழ்ந்தன.

- Advertisement -

ஒரிஜினல் ஃபார்ம்:

சிட்னி அணிக்காக தனது முதல் போட்டியிலேயே பாபர் அசாம் சதமடித்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் கணிப்பு வெளியிட்டார். ஆனால் தனது முதல் போட்டியிலேயே பாபர் அசாம் 2 (5) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். அதை விட இன்று நடைபெற்ற அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கு எதிரான 2வது போட்டியில் மிகவும் மோசமாக விளையாடிய அவர் 9 (10) ரன்னில் அவுட்டானார்.

இதையும் படிங்க: அந்த சி.எஸ்.கே வீரரை வாங்க ரிஷப் பண்ட் ரொம்ப ஆசைப்பட்டாரு.. ஆனா முடியல – லக்னோ ஓனர் வெளியிட்ட தகவல்

அந்த வகையில் முதல் 2 போட்டிகளிலும் ஆமை வேகத்தில் விளையாடிய பாபர் அசாம் ஆட்டத்தைப் பார்த்து ஆஸ்திரேலிய ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் ஏமாற்றத்தைச் சந்தித்தனர். அதைப் பார்க்கும் இந்திய ரசிகர்கள் இவரைப் போய் கிங் விராட் கோலியுடன் ஒப்பிடுகிறீர்களே, இது தான் இவருடைய உண்மையான ஃபார்ம் என்று சமூக வலைதளங்களில் பதிவிடுகிறார்கள். மேலும் ஆஸ்திரேலிய மண்ணில் அதிக சர்வதேச (10) சதங்கள் அடித்த வெளிநாட்டு வீரராக உலக சாதனை படைத்துள்ள விராட் கோலி தான் என்றுமே கிங் என்றும் இந்திய ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement