எதிர்வரும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்களின் மினி ஏலமானது நேற்று டிசம்பர் 16-ஆம் தேதி அபுதாபியில் நடைபெற்று முடிந்தது. இந்த மினி ஏலத்தில் இறுதி படுத்தப்பட்ட 300-க்கும் மேற்பட்ட வீரர்களின் பட்டியலில் இருந்து 77 வீரர்களை 10 அணிகளை சேர்ந்த நிர்வாகிகளும் சரியான முறையில் ஏலத்தில் போட்டியிடுத்து வாங்கி இருந்தனர். இந்த மினி ஏலத்தில் பல்வேறு நட்சத்திர வீரர்கள் வெவ்வேறு அணிகளுக்கு பெரிய தொகையுடன் இடமாறியுள்ளனர்.
அந்த சி.எஸ்.கே வீரரை வாங்க பண்ட் ரொம்ப ஆசைப்பட்டார் : சஞ்சீவ் கோயங்கா
அந்த வகையில் சி.எஸ்.கே அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான மதீஷா பதிரனாவை 18 கோடி ரூபாய் என்கிற மிகப்பெரிய தொகைக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது ஏலத்தில் வாங்கியிருந்தது. அவரது இந்த வருகை கொல்கத்தா அணிக்கு மேலும் பலத்தை சேர்த்துள்ளதாக பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த ஐ.பி.எல் மினி ஏலத்தின் போது லக்னோ அணியின் கேப்டனான ரிஷப் பண்ட் மதீஷா பதிரானாவை வாங்க மிகவும் விரும்பியதாக அந்த அணியின் உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா வெளிப்படையாக சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : எங்களுடைய கேப்டன் மற்றும் துணை கேப்டன் இருவருமே பதிரானாவின் மீது மிக ஆர்வமாக இருந்தார்கள்.
மேலும் இந்த மினி ஏலத்தின் போது நான் அவரை வாங்கி விட வேண்டும் என்று அவர்கள் மிகவும் விரும்பினார்கள். என்னை பொறுத்தவரை எனக்குமே மதிஷா பதிரானாவை ஏலத்தில் எடுக்க மிகவும் விருப்பமாக தான் இருந்தது. அதனால்தான் முடிந்தவரை அவரை ஏலத்தில் வாங்க போட்டிக்கு சென்றோம். இருந்தாலும் 17.80 கோடி ரூபாய் மட்டுமே எங்களிடம் இருந்ததால் அவரை வாங்க முடியாமல் போனது.
மேலும் ஆண்ரிச் நோர்க்கியாவும் எங்களது திட்டத்தில் இருந்தார். அவரை வாங்கியதில் மகிழ்ச்சி. அதேபோன்று உலகத்தரம் வாய்ந்த லெக்ஸ் ஸ்பின்னர் வேண்டும் என்று நினைத்து ஹசரங்காவை வாங்கி இருக்கிறோம். நாங்கள் வாங்கிய அந்த வீரர் நிச்சயம் மூன்று வகையான துறைகளிலும் சிறப்பாக செயல்படுவார் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க : தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான டி20 தொடரில் இருந்து கடைசி நேரத்தில் விலகிய சுப்மன் கில் – என்ன காரணம்?
சென்னை அணிக்காக கடந்த சில சீசன்களாக விளையாடி வந்த மதீஷா பதிரானா பல்வேறு போட்டிகளில் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த வேளையில் அவரை சி.எஸ்.கே அணி கழற்றிவிட்டார்கள். அப்படி மினி ஏலத்திற்கு வந்த அவர் அதிக தொகைக்கு ஏலத்தில் சென்ற இலங்கை வீரராக 18 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா அணிக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



