- Advertisement -
டி20

பிக்பேஷ்: 2 பந்தில் 5 ரன்ஸ்.. கிங்ன்னா அது கோலி மட்டுமே.. ஏமாந்த ஆஸியில் பல்ப் வாங்கிய பாபர் அசாம்

ஆஸ்திரேலியாவில் புகழ்பெற்ற பிக்பேஷ் பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 2025/26 சீசன் டிசம்பர் 14ஆம் தேதி கோலாகலமாக துவங்கியது. பெர்த் மைதானத்தில் துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் மாற்றும் சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் மோதின. அப்போட்டியில் சிட்னி அணிக்காக பாபர் அசாம் அறிமுகமாக விளையாடியது பாகிஸ்தான் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை உண்டாக்கியது.

ஒரு கட்டத்தில் விராட் கோலியை விட பாபர் மிகச்சிறந்த கிங் பேட்ஸ்மேன் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் தலையில் வைத்து கொண்டாடினார்கள். அதற்கு பரிசாக இதே ஆஸ்திரேலியாவில் நடந்த 2022 டி20 உலகக் கோப்பையில் அவரது தலைமையில் ஜிம்பாப்வே அணியிடம் பாகிஸ்தான் தோற்றது. 2024 டி20 உலகக்கோப்பையில் அவருடைய தலைமையில் மற்றொரு கத்துக்குட்டியான அமெரிக்கா அணியிடம் பாகிஸ்தான் மண்ணைக் கவ்வியது.

- Advertisement -

ஆஸியில் வரவேற்பு:

மேலும் 2023 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானிடம் முதல் முறையாக பாகிஸ்தான் மண்ணைக் கவ்வியது. அந்தத் தோல்விகளுக்கு பேட்டிங்கில் மோசமாக விளையாடி முக்கிய காரணமான பாபர் அசாம் கேப்டன்ஷிப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின்பும் சாதாரண பேட்ஸ்மேனாக சுமாராக விளையாடிய அவர் பாகிஸ்தானின் தோல்விகளுக்கு காரணமாக அமைந்தார்.

அதனால் தயவு செய்து இவரை விராட் கோலியுடன் ஒப்பிடாதீர்கள் என்று சோயப் அக்தர் போன்ற முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் விமர்சித்தனர். அந்த சூழ்நிலையில் இத்தொடரில் சிட்னி அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்ட பாபர் அசாமை ஆஸ்திரேலியா ஊடகங்கள் மிகைப்படுத்தி வரவேற்றன. குறிப்பாக இப்போட்டிக்கு முந்தைய நாளில் “கிங் பாபர் அசாம் பெர்த் மைதானத்திற்கு வந்துள்ளார்” என்ற தலைப்புடன் பிபிஎல் (பிக்பேஷ்) நிர்வாகம் தங்களுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது.

- Advertisement -

ஆரம்பமே பல்ப்:

அதே போல சிட்னி அணிக்காக தமது முதல் போட்டியிலேயே பாபர் அசாம் சதமடித்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் கணிப்பு வெளியிட்டார். அந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்போடியில் முதலில் விளையாடிய சிட்னி அணிக்கு ஓப்பனிங்கில் களமிறங்கிய பாபர் அசாம் 5 பந்துகளை எதிர்கொண்டு திணறலாக விளையாடி 2 ரன்னில் அவுட்டாக்கி சென்றார்.

இதையும் படிங்க: நான் அதுக்கும் தயார்.. மினி ஏலத்திற்கு முன்னதாக முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கேமரூன் கிரீன் – விவரம் இதோ

அதனால் பாபர் அசாமை கிங் என்றெல்லாம் சொல்லி வரவேற்ற பிபிஎல் நிர்வாகம் மற்றும் ஆஸ்திரேலிய ஊடகங்களுக்கும் பெரிய ஏமாற்றமே மிஞ்சியது. அந்த வகையில் பாபர் அசாம் பல்ப் வாங்கியதைப் பார்த்த இந்திய ரசிகர்கள் விராட் கோலி மட்டுமே நவீன கிரிக்கெட்டிம் கிங் என்று சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கிறார்கள். ஏனெனில் உலகிலேயே ஆஸ்திரேலிய மண்ணில் அதிக (10) சர்வதேச சதங்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற உலக சாதனையை விராட் கோலி படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -