இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக நாளை மறுதினம் டிசம்பர் 16-ஆம் தேதி அடுத்த ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் மினி ஏலமானது நடைபெற உள்ளது. இந்த ஏலத்திற்கு முன்னதாகவே கடந்த மாதம் 10 அணிகளும் தங்களது அணியில் இருந்து வெளியேற்ற வீரர்களின் பட்டியலையும், தக்கவைத்த வீரர்களின் பட்டியலையும் வெளியிட்டு விட்டது. அதோடு இம்முறை சில வீரர்கள் டிரேடிங் முறையிலும் அணிமாற்றம் செய்துள்ளனர்.
நான் ஐ.பி.எல் போட்டிகளில் பந்துவீசவும் தயார் : கேமரூன் கிரீன்
மேலும் மினி ஏலத்தில் பல்வேறு வீரர்கள் ஒரு சில அணிகளால் வாங்கப்படுவார்கள் என்பதனால் இந்த மினி ஏலம் குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏற்கனவே இந்த மினி ஏலத்தில் எந்தெந்த அணி எந்தெந்த வீரர்களை வாங்கும் என்று முன்னாள் வீரர்கள் சிலர் தங்களது கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த மினி ஏலத்தின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கிட்டத்தட்ட 43 கோடிய 40 லட்ச ரூபாய் உடனும், கொல்கத்தா அணி 63 கோடியே 40 லட்சம் ரூபாய் உடனும் கலந்து கொள்ள உள்ளதால் அந்த இரண்டு அணிகளும் முக்கிய வீரர்கள் சிலருக்கு போட்டி போடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான கேமரூன் கிரீனுக்கு அதிக விலை கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஏனெனில் பேட்டிங்கில் அதிரடி காண்பிப்பது மட்டுமின்றி பகுதிநேர பந்துவீச்சாளராகவும் அவர் செயல்படுவார் என்பதனால் அவரின் மீதான கவனம் சிஎஸ்கே மத்தியில் அதிகம் இருக்கிறது. இந்நிலையில் மினி ஏலத்தின் போது பேட்ஸ்மேன் என்ற பட்டியலில் தனது பெயரை பதிவு செய்திருந்தாலும் நிச்சயம் பந்து வீசுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : மினி ஏலத்தின் பட்டியலில் எனது மேலாளர் தவறுதலாக என் பெயரை பேட்டர் என்று மட்டுமே குறிப்பிட்டு விட்டார். ஆனால் நிச்சயம் நான் ஐபிஎல் போட்டிகளில் பந்து வீசுவேன் என்று விளக்கம் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அவர் நிச்சயம் அடுத்த ஐபிஎல் தொடரில் பந்து விசுவார் என்பது உறுதியாகியுள்ளது.
இதையும் படிங்க : 8 பேட்ஸ்மேன், 5 பவுலர்.. சாம்சன், கில் உட்பட 3வது டி20க்கான தனது தரமான இந்திய பிளேயிங் லெவன் பற்றி உத்தப்பா
ஏற்கனவே காயம் காரணமாக கடந்த பல மாதங்களாக சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் இருந்த கேமரூன் கிரீன் பந்து வீசுவதை தவிர்த்து வந்த நிலையில் மினி ஏலத்திற்கு முன்னதாக தான் மீண்டும் பந்துவீச தயார் என்று அறிவித்துள்ளது ஐ.பி.எல் அணிகளின் கவனத்தை ஈர்க்கும் விதமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.



