உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனா இருந்து என்ன பயன்? மீண்டும் பாக் அணியை கைவிட்டு.. மோசமான உலகசாதனை படைத்த பாபர் அசாம்

Stumping Babar Azam
Advertisement

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 14ஆம் தேதி கொழும்புவில் நடைபெற்ற முக்கியமான சூப்பர் 4 போட்டியில் இலங்கைக்கு எதிராக டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் மழையால் குறைக்கப்பட்ட 42 ஓவர்களில் 252/7 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 86 ரன்களும் அப்துல்லா சபிக் 52 ரன்களும் இப்திகார் அகமது 47 ரன்கள் எடுக்க இலங்கை சார்பில் அதிகபட்சமாக பதிரனா 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து 252 என்ற புதிய இலக்கை துரத்திய இலங்கைக்கு நிசாங்கா 29, குசால் பெரேரா 17 என துவக்க வீரர்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

இருப்பினும் மிடில் ஆர்டரில் சமரவிக்கிரமா மிகச்சிறப்பாக செயல்பட்டு 48 ரன்களும் குசால் மெண்டிஸ் சவாலை கொடுத்து 91 ரன்கள் எடுத்து அசத்தினார்கள். ஆனால் கடைசியில் சனாகா 2, டீ சில்வா 5, வெல்லாலகே 0 ரன்களில் அவுட்டானதால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டாலும் மறுபுறம் தில்லாக நின்ற அசலங்கா 49* (47) ரன்கள் அடித்து கடைசி பந்தில் இலங்கையை 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து ஃபைனலுக்கு அழைத்துச் சென்றார்.

- Advertisement -

பாபர் அசாம் ஏமாற்றம்:
குறிப்பாக செப்டம்பர் 17ஆம் தேதி இந்தியாவுக்கு எதிராக நடைபெறும் ஃபைனலுக்கு நடப்பு சாம்பியன் இலங்கை தகுதி பெற்று அசத்தியது. அதனால் இப்திகார் அகமது 3 விக்கெட்டுகளும் பாபர் அசாம் ஷாஹீன் அப்ரிடி 2 விக்கெட்டுகள் எடுத்தும் பாகிஸ்தான் பரிதாபமாக வெளியேறியது.
முன்னதாக ஃபைனலுக்கு தகுதி பெறுவதற்கு இப்போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் களமிறங்கியது.

அப்போது தரவரிசையில் உலகில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக திகழும் பாபர் அசாம் சிறப்பாக செயல்பட்டு பெரிய ரன்களை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக விராட் கோலியை விட சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கும் அவர் இப்போட்டியில் இலங்கையை துவம்சம் செய்து பாகிஸ்தானை காப்பாற்றுவார் என்று மேத்தியூ ஹெய்டன் ஆரம்பத்திலேயே தெரிவித்திருந்தார்.

- Advertisement -

ஆனால் 3 பவுண்டரியுடன் 29 (35) ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை பெற்ற அவர் கடந்த போட்டியில் டாப் 5 இந்திய பேட்ஸ்மேன்களை திணறடித்த 20 வயது இலங்கை ஸ்பின்னர் வெல்லாலகே சுழலில் சிக்கி ஸ்டம்பிங் முறையில் பரிதாபமாக அவுட்டாகி மீண்டும் முக்கியமான போட்டியில் ஏமாற்றத்தையே கொடுத்தார். அதை விட கடந்த மே மாதம் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் 3 போட்டிகளில் 66, 79, 4 ரன்கள் எடுத்த பின் இதே போல பாபர் அசாம் ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்திருந்தார்.

இதையும் படிங்க: மெகா ட்விஸ்ட் வைத்த அப்ரிடி.. கடைசி பந்தில் ஹீரோவாக இலங்கையை காப்பாற்றிய அசலங்கா.. பாகிஸ்தானை வீட்டுக்கு அனுப்பியது எப்படி?

அந்த வகையில் தற்போது 4வது முறையாக இந்த வருடம் ஸ்டம்ப்பிங்கான அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட காலண்டர் வருடத்தில் 4 முறை ஸ்டாம்பிங் முறையில் அவுட்டான முதல் கேப்டன் என்ற மோசமான உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த 1994இல் ஷேன் தாம்சன், 1996இல் சச்சின் டெண்டுல்கர், 1999இல் நாசர் ஹுசைன் ஆகியோர் சாதாரண வீரர்களாக மட்டுமே ஒரே வருடத்தில் 4 முறை ஸ்டம்பிங் முறையில் அவுட்டானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement