போட்டி முடிஞ்சி பும்ராவை ஏன் அனுப்புனீங்க ? கோலி ரவி சாஸ்திரிக்கு பயமா ? – அசாருதீன் கண்டனம்

Azharuddin
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 17-ஆம் தேதி தொடங்கிய உலகக் கோப்பை தொடரானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 12-சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வரும் இவ்வேளையில் இந்திய அணியானது தாங்கள் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி மிக மோசமான நிலையில் உள்ளது. அது மட்டுமின்றி இனிவரும் மூன்று போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றால் கூட அரையிறுதிக்கு தகுதி பெறுமா என்பது கேள்விக்குறி தான். அந்த அளவிற்கு இந்திய அணியின் ரன் ரேட் சரிந்துள்ளது.

bumrah

- Advertisement -

ஏற்கனவே முதல் போட்டியின்போது பாகிஸ்தான் அணியுடன் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக 8 விக்கெட் வித்தியாசத்தில் மீண்டும் தோல்வியைக் கண்டது. இப்படி இந்திய அணி 2 தோல்விகளை சந்தித்து உள்ளதால் மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறுமா ? என்பது சந்தேகம்தான்.

இந்நிலையில் ஒவ்வொரு போட்டி முடிந்த பின்னரும் தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் கோலி பேட்டி கொடுப்பார். அவர் இல்லாத நேரத்தில் ரவி சாஸ்திரியோ அல்லது துணை கேப்டன் ரோகித் சர்மாவோ பேட்டியளிப்பார்கள். ஆனால் நியூசிலாந்து போட்டி முடிந்த பிறகு பும்ரா பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டது பெரும் விமர்சனத்தை கிடைத்துள்ளது. இதுகுறித்து தனியார் பத்திரிக்கைக்கு பேட்டி அளித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் கூறுகையில் :

Bumrah-1

போட்டியில் தோல்வி அடைந்த பிறகு விராட் கோலி ஏன் பத்திரிகையாளர் சந்திப்புக்கு வரவில்லை. வெற்றி பெற்றால் மட்டும் பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டும் என்ற நினைப்பு இருக்கிறதா ? ஒருவேளை கோலி வரவில்லை என்றாலும் ரவிசாஸ்திரி வந்திருக்க வேண்டும். ஆனாலும் அவர்கள் இருவரும் வராமல் பும்ராவை ஏன் அனுப்பினர் ? இது தவறான ஒன்று எனக் கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் :

- Advertisement -

இதையும் படிங்க : 39 வயதில் கம்பேக் கொடுக்கவுள்ள இந்திய வீரர். யார் அந்த வீரர் தெரியுமா ? – ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்

போட்டியில் தோல்வி அடைந்தால் கேள்விகள் எழத்தான் செய்யும். அதில் அசிங்கப்படுவதற்கு ஒன்றும் இல்லை. எனவே ஒரு போட்டியில் தோல்வி அடைந்த பிறகு கேப்டன் மற்றும் பயிற்சியாளர் முன்வந்து பேட்டி அளித்திருக்க வேண்டும். ஆனால் பும்ராவை அனுப்பி பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொள்ள செய்தது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement