39 வயதில் கம்பேக் கொடுக்கவுள்ள இந்திய வீரர். யார் அந்த வீரர் தெரியுமா ? – ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்

IND-2

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் t20 உலகக்கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் 2 லீக் போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை சந்தித்து உள்ளதால் அரையிறுதிக்கான வாய்ப்பு தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் தான் மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்புவதாக வெளியிட்டுள்ள பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

yuvi

இந்திய அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகள், 304 ஒருநாள் போட்டிகள், 58 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள யுவ்ராஜ் சிங் 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின் வெளிநாட்டில் நடைபெறும் லீக் போட்டிகளில் கலந்து கொண்டு உவிளையாடி வந்தார்.

- Advertisement -

இந்நிலையில் அவர் தற்போது வெளியிட்டுள்ள ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில் கடைசியாக அவர் இந்திய அணி ஜெர்சியில் இங்கிலாந்துக்கு எதிராக 150 ரன்கள் அடித்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அதனுடன் உங்களின் தலைவிதியை கடவுள்தான் தீர்மானிக்கிறார். ரசிகர்களின் தொடர் கோரிக்கைகளை ஏற்று அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நான் மீண்டும் களத்தில் இறங்குவதாக நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Yuvraj Singh (@yuvisofficial)

மேலும் இந்த உணர்வை விவரிக்க வார்த்தைகள் இல்லை. உங்கள் அன்பிற்கும் வாழ்த்திற்கும் நன்றி இந்திய அணி தற்போது கடினமான இடத்தில் இருக்கும்போது ரசிகர்கள் கைவிடாமல் ஆதரவு கொடுக்குமாறு அவர் அந்த பதிவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : விராட் கோலி பண்ண தப்புக்கு அவங்க குடும்பம் என்ன பாவம் பண்ணாங்க ? – கோலிக்காக சப்போர்டுக்கு நின்ற இன்சமாம்

இந்நிலையில் யுவராஜ்சிங் களத்திற்கு எவ்வாறு எந்த ரோலில் களம் திரும்புகிறார் என்று தெரியவில்லை. இது தொடர்பான விடயம் தற்போது சஸ்பென்ஸ் ஆகவே ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement