- Advertisement -
ஐ.பி.எல்

இப்படி நடந்தா நாங்க எப்படி ஜெயிக்க முடியும்.. கே.கே.ஆர் அணிக்கெதிரான தோல்விக்கு பிறகு – அக்சர் படேல் வருத்தம்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நேற்று தங்களது சொந்த மண்ணில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 51-வது லீக் போட்டியில் விளையாடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது கே.கே.ஆர் அணியிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து. இந்த போட்டியில் தோல்வியை சந்தித்த டெல்லி அணியானது இந்த தொடரில் தங்களது ஏழாவது தோல்வியை பெற்று புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்திற்கு சரிந்துள்ளது.

கே.கே.ஆர் அணிக்கெதிரான தோல்விக்கு பிறகு : அக்சர் படேல் பேட்டி

அதேவேளையில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி ஏழாவது இடத்தை பிடித்துள்ளது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்களை மட்டுமே குவித்தது.

- Advertisement -

பின்னர் தொடர்ந்து விளையாடிய கொல்கத்தா அணி 14.2 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 147 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் கூறியதாவது : இந்த போட்டியில் நாங்கள் தேவையான ரன்களை விட மிகக் குறைவான ரன்களையே சேர்த்தோம். இந்த போட்டியில் கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்து வீசினர்.

மிகக் குறைந்த அளவிலான தவறுகளை மட்டுமே செய்த அவர்கள் மைதானத்தின் தன்மையை சரியாக கணித்து மிகச் சிறப்பாக பந்துவீசி இருந்தனர். குறிப்பாக இரண்டு மூன்று ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை நாங்கள் இழந்த பின்னர் எப்படி அந்த சரிவிலிருந்து மீண்டு வர முடியும். எங்களுடைய முமென்டம் இந்த போட்டியில் இருந்து தவறியதற்கு காரணமே அடுத்தடுத்து விழுந்த அந்த விக்கெட்டுகள் தான்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்த வெற்றிக்கு நான் பர்ஸ்ட் அவங்களுக்கு தான் தேங்க்ஸ் சொல்லனும் – அஜின்க்யா ரஹானே மகிழ்ச்சி

அதனாலே எங்களால் பெரிய ரன் குவிப்பிற்கு செல்ல முடியாமல் போனது. திடீரென இப்படி தொடர்ச்சியான விக்கெட்டுகள் விழும்போது இறுதிவரை நிற்க வேண்டியது அவசியம். அந்த வகையிலேயே நானும் அஷுதோஷ் சர்மாவும் ரன்களை சேர்க்க போராடினோம். இருந்தாலும் கொல்கத்தா அணியின் வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு எங்களை வீழ்த்தி விட்டனர் என அக்சர் பட்டேல் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -