இந்த வெற்றிக்கு நான் பர்ஸ்ட் அவங்களுக்கு தான் தேங்க்ஸ் சொல்லனும் – அஜின்க்யா ரஹானே மகிழ்ச்சி

Ajinkya Rahane
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026-ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 51-வது லீக் போட்டியானது நேற்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் அக்சர் பட்டேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், அஜின்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

டெல்லி அணிக்கெதிரான வெற்றிக்கு பிறகு : அஜின்க்யா ரஹானே பேட்டி

அதை தொடர்ந்து முதலில் விளையாடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்களை மட்டுமே குவித்தது. டெல்லி கேபிட்டல்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக பத்தும் நிசாங்கா 50 ரன்களையும், அஷுதோஷ் சர்மா 39 ரன்களையும் குவித்து அசத்தினர். கே.கே.ஆர் அணி சார்பாக அனுகுல் ராய், கார்த்திக் தியாகி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

- Advertisement -

பின்னர் 143 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணியானது டெல்லி அணியின் பந்துவீச்சை சிதறடித்து 14.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 147 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது கே.கே.ஆர் அணி சார்பாக அதிகபட்சமாக பின் ஆலன் 100 ரன்களையும், கேமரூன் கிரீன் 33 ரன்களையும் குவித்தனர்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் அஜின்க்யா ரஹானே கூறியதாவது : இந்த போட்டியில் பின் ஆலனின் ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்தது. முதல் 4-5 ஆட்டங்களாக அவர் மிகவும் கஷ்டப்பட்டார். ஆனால் அதன்பிறகு கடுமையாக உழைத்த அவர் தற்போது மீண்டும் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : டெல்லி அணிக்காக மாபெரும் சாதனையை நிகழ்த்தி அசத்திய கே.எல் ராகுல் – விவரம் இதோ

அதே வேளையில் நான் எங்களது அணியின் பந்துவீச்சாளர்களை பாராட்டியே ஆக வேண்டும். ஏனெனில் இந்த வெற்றிக்கு அவர்களே முழு காரணம். இந்த தொடர் முழுவதுமே எங்களது அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் என அனைவருமே சிறப்பாக செயல்படுகின்றனர் என அஜிங்க்யா ரஹானே பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement