டெல்லி அணிக்காக மாபெரும் சாதனையை நிகழ்த்தி அசத்திய கே.எல் ராகுல் – விவரம் இதோ

KL Rahul
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே.எல் ராகுல் கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கு பின்னர் லக்னோ அணியிலிருந்து வெளியேறி டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு இடம் மாறியிருந்தார். அப்படி டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு வந்த அவருக்கு கேப்டன் பதவியை வழங்க அந்த அணியின் நிர்வாகம் தயாராக இருந்தும் தான் ஒரு சாதாரண வீரராகவே விளையாட விரும்புவதாக தெரிவித்தார்.

டெல்லி அணிக்காக கே.எல் நிகழ்த்திய சாதனை :

மேலும் கேப்டன்சி பதவி வேண்டாம் என கேட்டுக்கொண்டு கடந்த ஆண்டு நடைபெற்ற 2025 ஐ.பி.எல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடிய கே.எல் ராகுல் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அதனை தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் தொடரிலும் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

- Advertisement -

சமீபத்தில் நடைபெற்ற போட்டி ஒன்றில் 150+ ரன்களை அடித்த அவர் முதல் இந்திய வீரராக ஐ.பி.எல் போட்டிகளில் 150+ ரன்களை பூர்த்தி செய்து சாதனையை நிகழ்த்தியிருந்தார். இந்நிலையில் நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய அவர் 23 ரன்களை குவித்ததன் மூலம் டெல்லி அணிக்காக ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் :

கடந்த ஆண்டு டெல்லி அணிக்காக அறிமுகமான அவர் டெல்லி அணிக்காக தான் விளையாடிய 24-வது ஐபிஎல் போட்டியில் 14 ரன்களை தொட்ட போது 1000 ரன்களை பூர்த்தி செய்தார். இதன்மூலம் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக குறைந்த இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை அடித்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை அவர் 24 போட்டிகளில் நிகழ்த்தியுள்ளார். இவருக்கு முன்னதாக ஜே.பி டுமினி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் டெல்லி அணிக்காக 35 இன்னிங்ஸ்களில் 1000 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்து வந்தது.

- Advertisement -

இதையும் படிங்க : நிச்சமயாக இந்த இளம்வீரர் வெகுவிரைவில் இந்திய அணிக்காக விளையாடுவார் – ஆகாஷ் சோப்ரா பாராட்டு

இவ்வேளையில் அவர்களது சாதனையை 11 போட்டிகள் முன்கூட்டியே கே.எல் ராகுல் முறையடித்துள்ளார். அதுமட்டும் இன்றி ஐபிஎல் வரலாற்றில் பஞ்சா கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ் என மூன்று அணிகளுக்காக 1000 ரன்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் அவர் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement