ஒருவேளை 4 ஆவது போட்டியில் அஷ்வினுக்கு ஓய்வு வழங்கப்பட்டால் அவரது இடத்தில் – விளையாடப்போவது யார்?

Ashwin
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த வேளையில் இந்திய கிரிக்கெட் அணியானது இந்த தொடரில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது.

அதோடு எஞ்சியிருக்கும் போட்டிகளிலும் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பே அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த தொடரின் போது தொடர்ச்சியாக ஓய்வின்றி விளையாடி வரும் இந்திய வீரர்கள் ஒரு சிலருக்கு பணிச்சுமை காரணமாக ஓய்வு வழங்கப்பட்டு மாற்று வீரர்கள் இடம் பிடித்து விளையாடி வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் ஏற்கனவே இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜிக்கு இந்த டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியின் போது ஓய்வு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ராவிற்கு நான்காவது டெஸ்ட் போட்டியின் போது ஓய்வு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கூடுதலாக தமிழக வீரர் அஸ்வினும் தேவைப்பட்டால் ஓய்வெடுத்துக் கொள்வார் என்பதனால் அவருக்கு பதிலாக எந்த வீரர் அணியில் விளையாடப் போகிறார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் ஒருவேளை அஸ்வின் தனக்கு ஓய்வு வேண்டும் என்று கேட்டுக்கொண்டு நான்காவது போட்டியில் விளையாட முடியாமல் போனால் அவருக்கு பதிலாக இடது கை சுழற்பந்து வீச்சாளரான அக்சர் பட்டேல் இடம் பிடிப்பார் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : இப்படி பேசுற நீங்க 7 – 8 நாள்ல அப்படி பேசுவீங்க.. இந்திய அணியை மறைமுகமாக எச்சரித்த மெக்கல்லம்

கடந்த சில ஆண்டுகளாகவே பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே மிகச்சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருக்கும் அக்சர் பட்டேல் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியிலும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement