இறுதிப்போட்டிக்கு முன்னதாக திடீரென டீமில் வெளியேறிய இந்திய வீரர் – மாற்று வீரராக தமிழக வீரர் சேர்ப்பு

Axar-and-Sundar
Advertisement

கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி துவங்கிய ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது நாளை செப்டம்பர் 17-ஆம் தேதி கொழும்பு மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியுடன் நிறைவுபெற இருக்கிறது. இந்த ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. இந்த இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்த இறுதிப் போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான அக்சர் பட்டேல் அணியிலிருந்து வெளியேறியுள்ளார் என்றும் அவருக்கு பதிலாக தமிழக சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்படுகிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே கொழும்பு மைதானத்தில் நேற்று செப்டம்பர் 15-ஆம் தேதி நடைபெற்ற சூப்பர் போர் சுற்றின் கடைசி ஆட்டத்தில் பங்கேற்று விளையாடியிருந்த அக்சர் பட்டேலுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதால் இந்த இறுதிப் போட்டிக்கு முன்னதாக வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.

சீனாவில் நடைபெற இருக்கும் ஏசியன் கேம்ஸ் தொடரில் பங்கேற்பதற்காக பெங்களூருவில் பயிற்சியில் இருந்த வாஷிங்டன் சுந்தர் தற்போது இந்த இறுதி போட்டிக்கு முன்னதாக இலங்கை சென்று இந்திய அணியுடன் இணைவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

ஏற்கனவே இந்த ஆசியக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்று விட்டதால் நேற்று பங்களாதேஷ் அணிக்கெதிரான போட்டியில் விளையாட அக்சர் பட்டேலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்திய அவர் பந்துவீச்சில் 1 விக்கெட்டையும், பேட்டிங்கில் 42 ரன்களையும் குவித்து அசத்தினார்.

இதையும் படிங்க : 110 ரன்கள்.. கலங்கும் அளவுக்கு தெ.ஆ பேட்ஸ்மேன்களிடம் காட்டடி வாங்கிய ஆடம் ஜாம்பா – ரசித் கானை முந்தி 2 மோசமான உலக சாதனை

இந்தியாவில் அடுத்த மாதம் துவங்க இருக்கும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் இடம்பிடித்திருக்கும் அக்சர் பட்டேலுக்கு தற்போது ஏற்பட்டுள்ள காயம் சிறிய அளவிலேயே இருக்க வேண்டும் என்றும் விரைவில் அவர் முழு உடற்தகுதியுடன் மீண்டும் அணியில் இணைய வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பதாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement