110 ரன்கள்.. கலங்கும் அளவுக்கு தெ.ஆ பேட்ஸ்மேன்களிடம் காட்டடி வாங்கிய ஆடம் ஜாம்பா – ரசித் கானை முந்தி 2 மோசமான உலக சாதனை

Adam Zampa
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த தென்னாபிரிக்கா அதற்கடுத்த 2 போட்டிகளில் வென்று தக்க பதிலடி கொடுத்து 2 – 2* என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது. குறிப்பாக இத்தொடரின் முக்கியமான 4வது போட்டியில் 164 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்த தென்னாப்பிரிக்கா மிகப்பெரிய வெற்றி பெற்று அட்டகாசம் செய்தது.

செஞ்சூரியன் நகரில் செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 50 ஓவர்களில் ஆஸ்திரேலியா பவுலர்களை சரமாரியாக அடித்து நொறுக்கி 416/5 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு குயின்டன் டீ காக் 45, டுஷன் 62 ரன்கள் எடுத்ததை விட மிடில் ஆர்டரில் 13 பவுண்டரி 13 சிக்சரை தெறிக்க விட்ட ஹென்றிச் க்ளாஸென் 174 (83) ரன்களை விளாசி ஆஸ்திரேலியா பவுலர்களை பந்தாடி மைதானத்திற்கு வந்த ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தினார்.

- Advertisement -

மோசமான உலக சாதனை:
அவருடன் நட்சத்திர வீரர் டேவிட் மில்லர் தம்முடைய பங்கிற்கு 6 பவுண்டரி 5 சிக்சரை பறக்க விட்டு 82* (45) ரன்கள் குவித்து சூப்பர் ஃபினிஷிங் கொடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஹேசல்வுட் 2 விக்கெட்களை எடுத்தார். அதைத்தொடர்ந்து 417 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு டேவிட் வார்னர் 12, மிட்சேல் மார்ஷ் 6, லபுஸ்ஷேன் 20, ஸ்டோனிஸ் 18 என முக்கிய பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அதனால் அலெக்ஸ் கேரி தனி ஒருவனாக போராடி 99 ரன்கள் எடுத்தும் 34.5 ஓவரில் ஆஸ்திரேலியாவை 252 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி வென்ற தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக லுங்கி நிகிடி 4 விக்கெட்டுகள் சாய்த்தார். அப்படி பேட்டிங்கில் துவம்சம் செய்த தென்னாபிரிக்க பேட்ஸ்மேன்களிடம் கிட்டத்தட்ட அனைத்து ஆஸ்திரேலிய பவியலர்களும் ரன்களை வாரி வழங்கி அடி வாங்கினர்.

- Advertisement -

அதில் உச்சமாக ஆஸ்திரேலியாவின் முதன்மை சுழல் பந்து வீச்சாளரான ஆடம் ஜாம்பா 10 ஓவரில் 1 விக்கெட் கூட எடுக்காமல் சதமடித்து 113 ரன்களை வள்ளலாக வாரி வழங்கினார். இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட போட்டியில் அதிக ரன்கள் வாரி வழங்கிய வீரர் என்ற மோசமான சாதனையை அடம் ஜாம்பா படைய்துள்ளார். அந்த பட்டியல்:
1. எம் லெவிஸ் (ஆஸ்திரேலியா) : 113 ரன்கள், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, 2006
1. ஆடம் ஜாம்பா (ஆஸ்திரேலியா) : 113 ரன்கள், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, 2023*
2. வாகப் ரியாஸ் (பாகிஸ்தான்) : 110 ரன்கள், இங்கிலாந்துக்கு எதிராக, 2019

இதையும் படிங்க: 110 ரன்கள்.. கலங்கும் அளவுக்கு தெ.ஆ பேட்ஸ்மேன்களிடம் காட்டடி வாங்கிய ஆடம் ஜாம்பா – ரசித் கானை முந்தி 2 மோசமான உலக சாதனை

அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட போட்டியில் அதிக ரன்களை வாரி வழங்கிய ஸ்பின்னர் என்ற மோசமான உலக சாதனையும் அவர் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ஆடம் ஜாம்பா : 113 ரன்கள், தென்னாபிரிக்காவுக்கு எதிராக, 2023*
2. ரசித் கான் : 110 ரன்கள், இங்கிலாந்துக்கு எதிராக, 2019
3. பிலிப் போஸ்வெயின் : 108 ரன்கள், இங்கிலாந்துக்கு எதிராக, 2022

Advertisement